மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய கால்பந்து ரசிகர்கள்

Report Print Thayalan Thayalan in கிரிக்கெட்
மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய கால்பந்து ரசிகர்கள்
0Shares
0Shares
lankasri.com

2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் விளையாடுவதற்கு எகிப்து அணி தகுதி பெற்றுள்ளது.

நேற்று கொங்கோ அணியுடன் இடம்பெற்ற தகுதிச் சுற்று போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலமே எகிப்து அணி இந்தத் தகுதியினைப் பெற்றுக்கொண்டுள்ளது.

மேலும், இந்த வெற்றியினூடாக உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் எகிப்து அணியானது 28 ஆண்டுகளுக்கு பின்னர் தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பமானது எகிப்து நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கூடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை, எகிப்தின் இந்த வெற்றி மற்றும் உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடருக்காக தகுதி பெற்றது தொடர்பிலும் எகிப்திய ஜனாதிபதி அப்டெல் பட்டாஹ் அல் சிசி தனது மகிழ்ச்சியினைப் பகிந்து கொண்டுள்ளதோடு, நாட்டு மக்களுக்கும், கால்பந்து வீரர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்