உருக்கமுடன் அனைவருக்கும் நன்றி சொன்ன சிக்ஸர் மன்னன் பாண்ட்யா: ஏன் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய அணியில் தற்போது வளர்ந்து வரும் வீரராக பாண்ட்யா உருவெடுத்துள்ளார். இவரின் அதிரடியைக் கண்டு இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது.

அதுமட்டுமின்றி இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி, பாண்ட்யா ஒரு அற்புதமான வீரர், அவர் தற்போது விளையாடுவது போல் சிறப்பாக விளையாடி வந்தால் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் போல் வருவார் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாண்ட்யா தனது டுவிட்டர் பக்கத்தில், நாங்கள் அதாவது இந்திய அணி குவஹாத்திக்கு வந்திருக்கிறோம். முதன்முறையாக நான் இங்கு வந்திருக்கிறேன்.

டுவிட்டரில் என்னை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியிருப்பது மகிழ்ச்சி கலந்த ஆச்சர்யமாக உள்ளது.

எப்போதும் என் பின்னால் இருந்து நீங்கள் என்னை வழிநடத்துகிறீர்கள். நீங்கள் எனக்கு அளிக்கும் இந்த அளப்பரிய அன்பு, என் வாழ்நாள் முழுவதும் கிடைக்கவேண்டும் என விரும்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் நன்றி. உண்மையில் நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டும் போதாது. இதுபோன்று தொடர்ந்து எனக்கு ஆதரவு தாருங்கள். இந்திய அணிக்கும் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்