அவுஸ்திரேலிய அணி தேர்வில் இப்படி ஒரு பிரச்சனை இருந்ததா? அம்பலப்படுத்திய கவாஜா

Report Print Santhan in கிரிக்கெட்
445Shares
445Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலியா அணி தேர்வில் கடந்த காலங்களில் நிறவெறியும், அரசியலும் இருந்ததாக அவுஸ்திரேலியா அணி வீரர் உஸ்மன் கவாஜா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பிறந்து தன்னுடைய இளம் வயதில் அவுஸ்திரேலியா சென்று அந்த நாட்டு கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடி வருபவர் உஸ்மான் கவாஜா(30).

இவர் சமீபத்தில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், சிட்னியில் இளம் வீரராக வளர்ந்து வந்த காலங்களில் நிறவெறித்தனமான இழிவு படுத்தல்களை சந்தித்து இருக்கிறேன்.

இதன் காரணமாக அவுஸ்திரேலியா அணியை ஆதரிக்க முடியாத அளவிற்கு கோபம் அடைந்திருக்கிறேன்.

கடுமையான வசைபாடுதல்களை சந்தித்து இருக்கிறேன். அதில் சில வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு இருக்கும், அந்த சொற்கள் இன்றளவும் கூட தன்னை காயப்படுத்துகின்றன.

அவுஸ்திரேலியாவில் பிறக்காத பலரும் அவுஸ்திரேலிய அணியை ஆதரிக்காததற்கு காரணம் இந்த நிறவெறி போக்கு தான், அவுஸ்திரேலியா கிரிக்கெட் தற்போது தான் மெதுவாக மாற்றம் அடைந்து வருகிறது.

மேலும் அவுஸ்திரேலியா என்றால் உண்மையில் என்ன என்பது பிரதிபலிக்க தொடங்கி உள்ளது. பலதரப்பட்ட மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் அணியாக உருவெடுத்துள்ளது.

கடந்த காலங்களில் அவுஸ்திரேலியா அணி தேர்வில் நிறவெறியும், அரசியலும் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்