சாதனையை தவறவிட்ட இந்தியா: அவுஸ்திரேலியா அசத்தல் வெற்றி

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடருக்கு பின்னர் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்திருந்தது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி கவுஹாத்தியில் நடந்தது. இதில் நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் வார்னர், முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (8), தவான் (2), கோஹ்லி (0), பாண்டே (6) என ‘முதல் வரிசை’ வீரர்களை பெஹர்டெண்டிராப் பெவிலியனுக்கு அனுப்பினார்.

அடுத்து வந்த ஜாதவ் (27), டோனி (13), பாண்டியா (25) நீண்டநேரம் தாக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து இந்திய அணி, 20 ஓவரில் 118 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய அவுஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர்களான வார்னர் (2), பின்ச் (8) சொதப்பலாக வெளியேறினர்.

பின்னர் களமிறங்கிய ஹென்ரிக்ஸ், ஹெட் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய பந்துவீச்சாளர்களை மிகச்சுலபமாக சமாளித்த இந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. இதையடுத்து அவுஸ்திரேலிய அணி 15.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 122 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 1-1 என அவுஸ்திரேலிய அணி சமன் செய்தது. இந்த தோல்வியின் மூலம் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 தொடர்களை கைப்பற்றும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது. ஆனால் அடுத்த போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் இந்த சாதனையை இந்திய அணி வசமாக்கலாம்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்