முதல் ஒருநாள் போட்டி: இலங்கை- பாகிஸ்தான் இன்று மோதுகிறது

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கவுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள இலங்கை- பாகிஸ்தான் அணிகள் இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

ஏற்கனவே டெஸ்ட் தொடரை இலங்கை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ள நிலையில், இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால் பாகிஸ்தான் அணி உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் பங்கேற்கலாம்.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா இல்லாதது பாகிஸ்தானுக்கு கூடுதல் பலத்தை அளிக்கலாம்.

குறிப்பாக இதுபோன்ற மிக நீண்ட போட்டித்தொடரில் அணித்தலைவராக சர்ப்ராஸ் அகமது பங்குபெறுவது இதுவே முதல்முறையாகும்.

போட்டித் தொடர் வெற்றிகரமாக முடிவடையும் பட்சத்தில் கடைசி டுவென்டி- 20 தொடரில் லாகூரில் நடைபெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானில் இலங்கை விளையாடும் போட்டி இதுவாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்