திருமண பந்தத்தில் இணையும் இந்திய கிரிக்கெட் வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் நவம்பர் மாதம் 23ஆம் திகதி திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.

புவனேஸ்வர் குமாரின் திருமண நிச்சயதார்த்தம், நுபுர் நகர் என்ற பெண்ணுடன் கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் திகதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இம்மாதம் 23ஆம் திகதி நாக்பூரில் திருமணம் நடைபெற இருப்பதால்,

அவர், இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 16ஆம் திகதி நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவார் என கூறப்படுகிறது.

நவம்பர் 23ஆம் திகதி திருமணம் நடைபெறுவதைத் தொடர்ந்து, 26ஆம் திகதி அவரின் சொந்த ஊரான மீருட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்