தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய டோனி

Report Print Kabilan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி, அதிநவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் பயிற்சி அகாடமியை துபாயில் தொடங்கியுள்ளார்.

உலக அளவில் மிகப்பெரிய கிரிக்கெட் பயிற்சி மையத்தை தொடங்க வேண்டும் என்பது டோனியின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது.

இந்நிலையில் தனது கனவை நிறைவேற்றும் விதமாக, துபாயில் உள்ள அல் குவோஸ் எனும் இடத்தில், பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப், ஆர்க்கா ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து கிரிக்கெட் பயிற்சி அகாடமி ஒன்றை அமைத்துள்ளார்.

எம்.எஸ்.டோனி கிரிக்கெட் அகாடமி என பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சி அகாடமியில் வீரர்கள் பயிற்சிபெற வசதியாக நவீன உடற்பயிற்சிக் கூடங்கள், 4 செயற்கை இழை ஆடுகளங்கள், 3 சிமெண்ட் ஆடுகளங்கள், 3 மேட் ஆடுகளங்கள், சுழற்பந்து மற்றும் வேகப்பந்துகளை வீசும் பிரத்யேக இயந்திரங்கள் என பல வசதிகள் அடங்கியுள்ளன.

இரவிலும் பயிற்சி செய்ய சக்தி வாய்ந்த மின்விளக்குகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அகாடமியை திறந்து வைத்த டோனி கூறுகையில், ‘கிரிக்கெட் உலகுக்கு ஏதாவது திரும்ப செய்ய வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு. இந்த பயிற்சி அகாடமியை தொடங்குவதன் மூலம் என்னுடைய அந்த கனவு நிறைவேறியுள்ளது.

அதற்காக மகிழ்ச்சியடைகிறேன், என் எதிர்கால கனவுக்கு இந்த அகாடமி ஒரு தொடக்கம் மட்டுமே, இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அகாடமியில் மும்பையைச் சேர்ந்த விஷால் மஹாதிக் என்பவர் தலைமையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்