இலங்கை அணிக்கு பயிற்சியாளராக யார் வரவேண்டும்? ரசிகர்களின் கருத்துகணிப்பு

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கை அணிக்கு தலைமை பயிற்சியாளராக வங்கதேச அணியின் பயிற்சியாளராக இருந்த சண்டிகா ஹத்துருசிங்க வர வேண்டும் என்று ரசிகர்கள் அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர்.

இலங்கை அணி, தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 16-ஆம் திகதி கொல்கத்தாவில் துவங்கவுள்ளது.

இதற்கிடையில் இலங்கை அணிக்கு தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான ஜெயவர்த்தனே வர வேண்டுமா? அல்லது சண்டிகா ஹத்துருசிங்க வரவேண்டுமா? என்று பிரபல ஆங்கில நாளிதழ் ரசிகர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது.

இதில் தற்போது வரை நடந்த கருத்துக் கணிப்பில் சண்டிகா ஹத்துருசிங்க 60 சதவீதம் ஓட்டுகள் பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார், ஜெயவர்த்தனே 40 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ளார்.

சண்டிகா ஹத்துருசிங்க வங்கதேச அணிக்கு பயிற்சியாளராக இருந்தார், சமீபத்தில் தான் தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து அவர் விலகினார்.

விலகிய பின்னர் அவர் இலங்கை அணிக்கு தலைமை பயிற்சியாளராக தெரிவு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியது.

ஆனால் அவரோ தான் மீண்டும் இதுகுறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு முன்னாள் வீரரான ஜெயவர்த்தனே ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு தலைமை பயிற்சியாளராக உள்ளார். இவர் பயிற்சியில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை கடந்த ஆண்டு வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்