ஆஷஸ் டெஸ்ட்: ஸ்மித் சதத்தால் முன்னிலை பெற்ற அவுஸ்திரேலியா

Report Print Kabilan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆஷஸ் டெஸ்ட்டின் மூன்றாவது நாளில் அவுஸ்திரேலியா அணி 328 ஒட்டங்கள் சேர்த்து, 26 ஒட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

பிரிஸ்பேனில் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஸ்மித் 64 ஒட்டங்களுடனும், மார்ஷ் 44 ஒட்டங்களுடனும் ஆட்டத்தினை தொடர்ந்தனர்.

51 ஒட்டங்கள் சேர்த்த ஷேன் மார்ஷ், வேகப்பந்து வீச்சாளர் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த பெய்ன் 13 ஒட்டமும், ஸடார்க் 6 ஒட்டமும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆனால், நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 261 பந்துகளில் சதமடித்தார். 8வது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த கம்மின்ஸ் தனது 42 பங்குக்கு ஒட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஹேசல்வுட், லயன் சொற்ப ஒட்டங்களில் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணி 130.3 ஒவர்களில் 328 ஒட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஸ்டீவன் ஸ்மித் மட்டும் ஆட்டமிழக்காமல் 141 ஒட்டங்கள் எடுத்தார்.

இதன் மூலம் அவுஸ்திரேலியா 26 ஒட்டங்கள் முன்னிலை பெற்றது. பின்னர், இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணியின் குக் 7 ஒட்டங்களிலும், வின்ஸ் 2 ஒட்டங்களிலும் ஹேசல்வுட்டின் அபார பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 33 ஒட்டங்கள் எடுத்துள்ளது. ஸ்டோன்மேன் 19 ஒட்டங்களுடனும், ஜோ ரூட் 5 ஒட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணி தற்போது 7 ஒட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்