இரும்பு மனிதன் தலைமையில் இலங்கை அணி அறிவிப்பு

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
727Shares
727Shares
lankasrimarket.com

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி இரும்பு மனிதன் திசார பெரேரா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக பாகிஸ்தானுடன் விளையாடிய அணியிலிருந்து சந்திமால்இகுஷால் மெண்டிஸ்இகப்புகெதரஇசீக்குகே பிரசன்னா இமிலிந்த சிறிவர்தன ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.லசித் மலிங்காவுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லைஇ

உபாதையடைந்திருந்த அசேல குணரத்ன மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்இவண்டெர்சி இஅகில தனஞ்சய ஆகிய பிரதான சுழற்பந்து வீச்சாளர்களுடன் சுழற்பந்து வீசும் சகலதுறை வீரர்களான சதுரங்க டி சில்வா மற்றும் சசித பத்திரன ஆகியோர் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

எதிர்வரும் 10, 13, 17ஆகிய தினங்களில் தர்மசாலா இமொஹாலிஇவிசாகபட்டணம் ஆகிய நகரங்களில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

முதலிரு போட்டிகளும் காலை 10.30 க்கும் இறுதிப்போட்டி பகல் 1.30 க்கும் இடம்பெறவுள்ளது.

அணி விபரம்.

 1. திசார பெரேரா (அணித்தலைவர்)
 2. உப்புல் தரங்க
 3. தணுஷ்க குணதிலக
 4. நிரோஷன் டிக்வெல்ல
 5. சதீர சமரவிக்கிரம
 6. லஹிரு திரிமான்ன
 7. அஞ்சேலோ மத்தியூஸ்
 8. அசேல குணரத்ன
 9. சத்துரங்க டி சில்வா
 10. சச்சித் பத்திரன
 11. அகில தனஞ்சய
 12. ஜெப்ரி வண்டெர்சி
 13. துஷ்மந்த சமீர
 14. சுரங்க லக்மால்
 15. நுவான் பிரதீப்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்