டெல்லி டெஸ்டில் வாந்தி எடுத்த இலங்கை வீரர்: மருத்துவ பரிசோதனைக்கு மறுக்க காரணம் என்ன?

Report Print Santhan in கிரிக்கெட்
350Shares
350Shares
lankasrimarket.com

டெல்லியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, காற்று மாசுபாடு காரணமாக சிரமப்பட்ட இலங்கை விரர்கள் மருத்துவ பரிசோதனை செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ஓட்டங்கள் எடுத்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியின் போது இலங்கை வீரர்கள் டெல்லியில் ஏற்படும் காற்று மாசுப்பாட்டின் காரணமாக மிகவும் சிரமப்பட்டனர். அதில் சிலர் பீல்டிங் செய்ய முடியாமல் வெளியேறினர்.

இதைத் தொடர்ந்து நான்காம் நாள் ஆட்டம் முடிந்ததும், இலங்கை வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது டிக்வெல்லா, டி சில்வா மற்றும் சண்டகண் ஆகியோருக்கு பல்ஸ் மற்றும் ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்தனர், மூவருக்கும் 99, 98 மற்றும் 99 என்று இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பிறகு அவர்கள் மேலும் மருத்துவ பரிசோதனை செய்ய மறுத்துவிட்டார்கள். போட்டியின் போது வாந்தி எடுத்த சுரங்கா லக்மலும் பரிசோதனை செய்ய மறுத்துவிட்டார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்