காற்று மாசுபாட்டின் உச்சம்: டெல்லியில் கிரிக்கெட் போட்டிகளுக்கு தடை

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

காற்று மாசுபாடு குற்றச்சாட்டு எழுந்ததால் இனி இரண்டு ஆண்டுகளுக்கு டெல்லியில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாது என இந்திய கிரிக்கெட் சபை அதிரடியாக அறிவித்துள்ளது.

இதன் காரணத்தால் IPL போட்டிகளும் டெல்லியிலிருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றப்படவுள்ளது.

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான நடப்பு டெல்லி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது,கள்ளத்தடுப்பில் ஈடுபட்ட இலங்கை வீரர்கள், சுவாசிக்கச் சிரமமாக இருப்பதாக நடுவரிடம் முறைப்பாடு செய்தனர். டெல்லியில் ஏற்பட்ட காற்றுமாசு காரணமாக இலங்கை வீரர்கள் மூக்கை மறைத்த பாதுகாப்பு உறைகளுடன்(Mask) களத்தில் இறங்கி விளையாடினர்.

இலங்கை வீரர்களின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து இனிவரும் காலங்களில் டெல்லியில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தும்போது காற்று மாசு கணக்கில் கொள்ளப்படும் என்றும் 2020-ம் ஆண்டு வரை இனி டெல்லியில் கிரிக்கெட் போட்டிகள் நடக்காது என்றும் இந்திய கிரிக்கெட் சபை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்