தொடரை இழந்த நிலையிலும் இந்தியாவுக்கு வாழ்த்து கூறிய சண்டிமால்

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்தியா சிறப்பாக செயல்பட வாழ்த்துவதாக இலங்கை அணி தலைவர் தினேஷ் சண்டிமால் கூறியுள்ளார்.

இலங்கை- இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் 1-0 என்ற கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

மூன்றாவது போட்டி டிராவில் முடிய தனஞ்செய அடித்த 119 ஓட்டங்களும், ரோஷன் அடித்த 74 ஓட்டங்களும் உதவியாக இருந்தது.

போட்டிக்கு பின்னர் பேசிய இலங்கை தலைவர் தினேஷ் சண்டிமால், திறமையான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கடினமான நிலையிலும் தனஞ்செயவும், ரோஷனும் சிறப்பாக விளையாடினார்கள்.

நானும் கடினமாக உழைத்தேன், துடுப்பாட்ட பயிற்சியாளருடன் சேர்ந்து பல விடயங்களை கற்றேன்.

மாசு ஏற்பட்ட விடயத்தை பொருத்தவரை இலங்கையில் இது போன்று நாங்கள் அனுபவித்ததில்லை என்பதால் முதல் இரண்டு நாள் திணறினோம். கடைசி நாள் சிறப்பாக இருந்தது.

எங்களுக்கு ஆதரவளித்த இந்திய ரசிகர்களுக்கு நன்றி. தென் ஆப்பிரிக்க தொடரில் சிறப்பாக செயல்பட இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்