மீண்டும் அதிரடி மாற்றத்திற்குள்ளாகும் இலங்கை அணியின் தலைவர் பதவி

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் பதவியில் மீண்டும் மாற்றம் ஏற்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி பங்களாதேஷ் சுற்றுலா போட்டியின் போது புதிய தலைவரை நியமிக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருநாள் அணியின் தலைவர் பதவிக்கு, முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் அல்லது தற்போது டெஸ்ட் தலைவராக செயற்படும் தினேஸ் சந்திமால் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்கவின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதன்படி எதிர்வரும் 5 ஆம் திகதி புதிய தலைவர் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், பங்களாதேஸில் இடம்பெறவுள்ள முக்கோண தொடருக்கான அணியும் அன்று அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்