ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பிரபல வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

இந்திய அணி வீரரான யூசப் பாதன் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய அணியில் உடன் பிறந்த சகோதர்களாக இருப்பவர்கள் இர்பான் பதான், யூசப் பதான். தற்போது இருவருமே இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இதனால் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது யூசப் பதான் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

அவர் இருமலுக்கு பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்திருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால், பதான் 5 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட பிசிசிஐ தடைவிதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கிண்ணம் வென்ற போது யூசப் பதான் இந்திய அணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்