வேகத்தில் மிரட்டும் பந்து வீச்சாளர்: வங்கதேச தொடரில் சாதிக்க வரும் புது முக இலங்கை வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்
822Shares
822Shares
lankasrimarket.com

வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் புது முக வீரர் சேஹன் மதுஷங்க இடம் பெற்றுள்ளார்.

வங்கதேசத்தில் நடைபெறும் முத்தரப்பு தொடர் வரும் ஜனவரி 15-ஆம் திகதி துவங்கிறது. இத்தொடரில் இலங்கை, வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணியில் 16 பேர் கொண்ட வீரர்களில் பட்டியல் வெளியானது. இதில் மூன்று முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சேஹன் மதுஷங்க இடம் பிடித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளரான இவர் 140 கி.மீற்றர் வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்டவர்.

இந்நிலையில் இது குறித்து இலங்கை அணியின் பயிற்சியாளர் சண்டிகா ஹத்துருசிங்க, அடுத்து வரும் உலகக்கிண்ணத் தொடரில் குறைந்த பட்சம் 7 அல்லது 8 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவைப்படுவார்கள்.

அதற்கு வீரர்களுக்கு போதுமான பயிற்சி வேண்டும், அதன் காரணமாகவே சேஹன் மதுஷங்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் நடைபெறும் முத்தரப்பு போட்டியில் இலங்கை அணி வரும் 17-ஆம் திகதி ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.

இலங்கை அணிக்கு ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு மேத்யூஸ் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்