புதிய டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 947 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
நான்காவது இடத்தில் இருந்த இங்கிலாந்தின் ஜோ ரூட் 881 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி பட்டியலில் 880 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இலங்கை வீரர் தினேஷ் சண்டிமால் 743 புள்ளிகளுடன் இரண்டு இடங்கள் முன்னேறி எட்டாவது இடத்துக்கு வந்துள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியா தொடரில் அபாரமாக செயல்பட்டு வரும் தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபடா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்தின் ஆண்டர்சன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்திய வீரர்கள் ஜடேஜாவும், அஸ்வினும் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் நீடிக்கின்றனர்.
இலங்கை பந்துவீச்சாளர் ரங்கனா ஹெரத் ஆறாவது இடத்திலிருந்து ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.