பிசிசிஐக்கு நன்றி தெரிவித்த யூசுப் பதான்: காரணம் இதுதான்

Report Print Kabilan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கு ஐந்து மாதங்கள் விளையாட தடைவிதிக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யூசுப் பதான், தேசிய அணியில் இடம் கிடைக்காததால் தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், உள்ளூர் போட்டி தொடர் ஒன்றிற்காக அவருக்கு ஊக்க மருந்து பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால், அவர் தடை செய்யப்பட்ட மருந்தை உட்கொண்டிருந்தது தெரிய வந்ததால், ஐந்து மாதகாலம் விளையாடுவதற்கு யூசுப் பதானுக்கு பிசிசிஐ தடை விதித்தது.

இதற்கான விசாரணையை மேற்கொண்ட பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், யூசுப் பதானுக்கு கொடுக்கப்பட்ட இருமல் மருந்து தடை செய்யப்பட்டது ஆகும், இது அவருக்கு தவறுதலாகவே கொடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது.

இதற்கு யூசுப் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது விடயத்தில் நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டதற்காக பிசிசிஐக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்