காதல் மனைவி அளித்த மோதிரத்தை கழுத்தில் மாட்டிக்கொண்ட கோஹ்லி

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கும்- பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்தவுடன், வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் விராட் கோஹ்லி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்றார்.

பொதுவாக கிரிக்கெட் வீரர்கள், பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கும்போது கையில் மோதிரத்தை அணிவதை தவிர்த்துவிடுவார்கள்.

ஏனெனில் அது இவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும், சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட விராட் கோஹ்லிக்கும் இதே நிலைதான், ஆனால் விராட் கோஹ்லியோ தனது காதல் மனைவி அளித்த மோதிரம் எப்போதும் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்பதற்காக, மோதிரத்தை செயினில் மாட்டி அணிந்துகொண்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்