இந்திய மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பின்னர் அணியில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஆரம்ப வீரர்களாக முரளி விஜய் மற்றும் தவான் ஜோடிக்கு பதிலாக விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் களமிறக்கப்படவுள்ளதாக அறிய வருகின்றது.
அத்தோடு வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக ஜொலித்துவரும் ரஹானே மீளவும் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக அணிக்கு அழைக்கப்படவுள்ளார்.
அத்தோடு சுழல் பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு பதிலாக இஷாந்த் சரமாவை அணியில் இணைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சிலவேளைகளில் பார்த்திப பட்டேலையும் அணியில் இணைத்து ஆரம்ப வீரராக பயன்படுத்தும் எண்ணம் இருப்பதாகவும் இந்திய தரப்பு செய்திகள் குறிப்பிடுகின்றன.
இரு அணிகளுக்குமிடையிலான 2 வது போட்டி சென்சூரியன் மைதானத்தில் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ளது.