ஆப்கானிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் ரஷீத் கானை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டி போடுகின்றன.
ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் இம்மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது, இம்முறை, ஒவ்வொரு அணிகளின் பட்ஜெட்டும் 80 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே சில வீரர்கள் ’ரிட்டென்ஷன்’ முறையில் அணிக்கு தேர்வாகியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானின் ஆல் ரவுண்டர் ரஷீத் கானை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளும் வரிந்து கட்டியுள்ளன.
19 வயதான ரஷீத் கான், சென்ற ஆண்டிலிருந்து சிறப்பாக விளையாடி வருகிறார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 18 ஒட்டங்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ரஷீத் கான்.
ஒருநாள் போட்டிகளில் 32 ஆட்டங்களில் 112 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்த ரஷீத் கானை, கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணி 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ஒரு ஆப்கானிஸ்தான் வீரர் அதிக விலைக்கு ஏலம் போனது அதுவே முதல் முறையாகும்.
தற்போது அவுஸ்திரேலியாவில் நடக்கும், பிக் பாஷ் போட்டிகளில், சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வருகிறார் ரஷீத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
What a way to end the Strikers innings from Rashid Khan! Entertaining areas. #BBL07 pic.twitter.com/15HSAcdMHn
— KFC Big Bash League (@BBL) January 7, 2018