வெற்றிக்காக கோஹ்லி இதை செய்வாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், எட்ட வேண்டிய இலக்கை இந்திய அணி எட்ட முடியாமல் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதனால் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கூறி வருகின்றனர்.

குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானேவை இறக்காமல் ரோகித் சர்மாவை இறக்கியதால் அணியின் தலைவர் கோஹ்லி கடும் விமர்சனத்திற்குள்ளானார்.

இந்நிலையில் வேகப்பந்து வீச்சுக்கு அதிகம் கைகொடுக்கும் தென் ஆப்ரிக்க ஆடுகளத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அவசியமில்லை, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களை செய்தால் மட்டுமே இந்திய அணி, செஞ்சுரியனில் நடக்கும் இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெரும் என முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்