இந்திய அணி பயிற்சி போட்டியில் விளையாடாமல் போனது தவறு என்று தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் விரர் குளூஸ்னர் தெரிவித்துள்ளார்.
கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே சுவைத்து வந்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா மண்ணில் தோல்வியை கண்டுள்ளதால், கோஹ்லி உட்பட சில வீரர்கள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான குளூஸ்னர், இந்திய அணி, துணைக்கண்டத்தில் விளையாடும்போது, பயிற்சி போட்டியில் பங்கேற்பது அவசியம் இல்லை.
ஏற்கனவே பழக்கப்பட்ட ஆடுகளம் என்பதால் தேவைப்படாது. ஆனால், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் போட்டிகளில் பங்கேற்கும் முன், கண்டிப்பாக பயிற்சி போட்டி தேவை.
இது, அன்னிய மண்ணில் நிலவும் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள உதவும். ஆனால்இம்முறை இந்திய அணி பயிற்சி போட்டியை ரத்து செய்தது தவறு என்று தெரிவித்துள்ளார்.