டி20 வரலாற்றில் ரிஷப் பந்த் புதிய சாதனை

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பந்த் 32 பந்துகளில் சதம் கண்டு டி20 வரலாற்றில் 2-வது அதிவேக சதமெடுத்து அசத்தியுள்ளார்.

டெல்லியில் சையத் முஷ்டாக் அலி கிண்ண டி20 கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக ஆடிவருகிறார் ரிஷப் பந்த்.

இவர் 32 பந்துகளில் சதம் கண்டு புதிய இந்திய டி20 சாதனையைப் படைத்ததோடு டி20 வரலாற்றில் 2-வது அதிவேக சதமெடுத்து சாதனை படைத்துள்ளார்.

கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதமெடுத்ததே டி20 வரலாற்றில் அதிவேக சதமாக உள்ளது. ரிஷப் பந்த் இந்தப் போட்டியில் 38 பந்துகளில் 116 ஓட்டங்கள் குவித்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

145 ஓட்டங்கள் வெற்றி இலக்கை 8.2 ஓவர்கள் மீதம் வைத்து டெல்லி அணி வெற்றி பெற்றது. ரிஷப் தனது இன்னிங்ஸில் 12 சிக்சர்கள் 8 பவுண்டரிகள் விளாசியுள்ளார்.

2018 ஐபிஎல் தொடருக்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணி தக்க வைத்த வீரர்களில் ரிஷப் பந்த் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்