தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியா தோல்வியடைய காரணம் டோனியா?

Report Print Raju Raju in கிரிக்கெட்
868Shares
868Shares
lankasrimarket.com

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியின் தோல்விக்கு டோனியின் மந்தமான ஆட்டம் தான் காரணம் என ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்தியா வென்றது.

நேற்று நடைப்பெற்ற நான்காவது போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.

தவானின் சதம் மற்றும் கோஹ்லியில் அரைசதம் இந்திய அணிக்கு கைகொடுக்க, அந்த அணி 300 ஓட்டங்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடைசி நேரத்தில் வந்த வீரர்கள் அதிகளவில் ஓட்டங்கள் குவிக்க தவறியதால் இந்தியா 289 ஓட்டங்களே எடுத்தது.

இந்த ஓட்டங்களை எளிதாக எடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இந்நிலையில் டோனி 43 பந்தில் 42 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் அவர் இன்னும் கொஞ்சம் விரைவாக ஓட்டங்களை சேர்த்திருக்க வேண்டும் என ரசிகர்கள் டுவிட்டரில் கூறி வருகின்றனர்.

துடுப்பாட்டத்தில் டோனி மிகவும் மந்தமாக செயல்படுவதாகவும் விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்