இலங்கை அணியை வீழ்த்திய பின் ஆக்ரோசமாக நாகினி ஆட்டம் போட்ட வங்கதேச வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

இலங்கை அணியை வீழ்த்திய பின்பு வங்கதேச அணி வீரர் முஸ்தபிகுர் ரஹீம் ஆக்ரோசமாக நாகினி ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் போட்டியில் இலங்கை அணியிடம் தோற்ற இந்திய அணி, அதன் பின் வங்கதேச அணியை வீழ்த்தியது.

இந்திய அணியை வீழ்த்தி உற்சாகத்தில் இருந்த இலங்கை அணி நேற்று வங்கதேச அணியிடம் மோதியது. இதில் இலங்கை அணி நிர்ணயித்த 214 ஓட்டங்களை, வங்கதேச அணி எட்டி பிடித்து சாதனை படைத்தது.

இப்போட்டியில் வங்கதேச அணி வீரரான முஸ்தபிகுர் ரஹீம் 35 பந்துகளில் 72 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றி இலக்கை எட்டியவுடன் ரஹீம் ஆக்ரோசமாக கத்தி, அதன் பின் நாகினி போன்று ஆட்டம் போட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் வங்கதேசம் சென்ற இலங்கை அணி அங்கு டெஸ்ட், முத்தரப்பு தொடர், டி20 தொடர் என அனைத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்