இந்த ஷாட்டுக்கு 8 ஓட்டங்கள் தரணும்: வித்தியாசமான கோரிக்கை வைத்த டோனி

Report Print Raju Raju in கிரிக்கெட்
310Shares
310Shares
lankasrimarket.com

ஐபிஎல் போட்டியில் வீரர்கள் மைதானத்துக்கு வெளியே அடிக்கும் பந்துக்கு 8 ஓட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என டோனி கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாட வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இரண்டு போட்டியையும் வென்று அசத்தியுள்ளது.

30 வயதுக்கு மேல் உள்ள வீரர்கள் தான் அதிகம் என கிண்டல் செய்யப்பட்ட நிலையில், மிக சிறப்பாக விளையாடி சென்னை அணி வெற்றிகளை குவித்து வருகிறது.

இந்த போட்டிகளின் போது பல வீரர்கள் அடிக்கும் சிக்ஸர்கள் மைதானத்தை தாண்டி செல்கின்றன.

அப்படி மைதானத்தை தாண்டி பந்து செல்லும் பட்சத்தில் சிக்ஸருடன் 2 ஓட்டங்கள் போனஸாக சேர்த்து 8 ஓட்டங்களாக வழங்கப்பட வேண்டும் என டோனி கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்