சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி: ஹைதராபாத் போராட்டம் வீண்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
358Shares
358Shares
lankasrimarket.com

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அம்பதி ராயுடு (79), சுரேஷ் ரெய்னா (54) ஆகியோரின் ஆட்டத்தால் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க பந்து வீச்சாளர் தீபக் சாஹல் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி ரிக்கி புய் (0), மணிஷ் பாண்டே (0), தீப் ஹூடா (1) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது.

4-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் ஷாகிப் அல் ஹசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஸ்கோர் 71 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஷாகிப் அல் ஹசன் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து கேன் வில்லியம்சன் உடன் யூசுப் பதான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. நேரம் ஆகஆக கேன் வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

35 பந்தில் அரைசதம் அடித்த கேன் வில்லியம்சன் அதன்பின் வாணவேடிக்கை நிகழ்த்தினார். வில்லியம்சன் 51 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

வில்லியம்சன் ஆட்டமிழந்ததால், சென்னை அணியின் பக்கம் ஆட்டம் திரும்பியது.

இறுதியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. ஐதராபாத் அணியில் சிறப்பாக ஆடிய கேன் வில்லியம்சன் 84 ரன்கள் எடுத்தார்.

ஐதராபாத் அணியில் சிறப்பாக ஆடிய கேன் வில்லியம்சன் 84 ரன்கள் எடுத்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்