ஒரே சதத்தால் பல சாதனைகள் படைத்த ஷிகர் தவான்

Report Print Kabilan in கிரிக்கெட்
527Shares
527Shares
lankasrimarket.com

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில், இந்திய வீரர் ஷிகர் தவான் சதம் விளாசியதன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில், இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான் 87 பந்துகளில் சதம் விளாசினார்.

அதன் பின்னர், 96 பந்துகளில் 107 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 19 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்நிலையில், இந்த சதத்தின் மூலமாக அவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.

  • முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்பு சதமடித்த வீரர்களில், ஷிகர் தவான் 6வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் விக்டர் டிரம்பர்(1902ஆம் ஆண்டு) முதல் இடத்தில் உள்ளார்.
  • முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்பு அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில், தவான் முதல் இடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் 99 ஓட்டங்கள் எடுத்திருந்த சேவாக் உள்ளார்.
  • டெஸ்ட் ஆட்டத்தின் ஒரு Session-யில் 100க்கு அதிகமான ஓட்டங்கள் குவித்த வீரர்களில், கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் தவான் உள்ளார். பிராட்மேன் 6 தடவையும், தவான், டிரம்பர், ஹேமண்ட் ஆகியோர் 3 தடவை இதனை நிகழ்த்தியுள்ளனர்.
  • டெஸ்டில் 100 பந்துகளுக்குள் அதிக சதங்கள் விளாசியவர்களில் சேவாக்(6), கபில் தேவ்(3), ஆகியோருக்கு அடுத்து அசாருதீனுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் தவான்(2).

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்