குறும்பு செய்த குல்தீப் யாதவிற்கு சரியான பாடம் புகட்டிய டோனி: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்
293Shares
293Shares
lankasrimarket.com

தன்னுடைய பிறந்தநாளின் போது முகத்தில் கேக்கை தடவி குறும்பு செய்த குல்தீப் யாதவை ஓட ஓட விரட்டி டோனி முகத்தில் கேக்கை தடவியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணிக்கு பல பெருமைகள் தேடித்தந்த டோனியின் 37-வது பிறந்தநாள் நேற்று வீரர்கள் இருக்கும் அறையில் கொண்டாடப்பட்டது.

அப்போது டோனி கேக் வெட்டியவுடன், ஹார்திக் பான்ட்யா உடனடியாக கேக்கை எடுத்து டோனியின் முகத்தில் தடவினார்.

அதன் பின் குல்தீப் யாதவ் கேக்கை எடுத்து டோனியின் முகத்தில் தடவ, உடனடியாக சுதாரித்துக் கொண்ட டோனி, குல்தீப்பை ஓட ஓட விரட்டி அவருடைய முகத்தில் கேக்கை தடவினார்.

குல்தீப் யாதவ்வின் முகத்தில் டோனி கேக்கை அதிகமாக தடவியதால், அவர் அதை கழுவுவதற்கு சுமார் 1 மணி நேரமாவது ஆகியிருக்கும்.

இது தொடர்பான வீடியோவை டோனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய, அதை ரசிகர்கள் டிரண்டாக்கி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்