தொடர்ச்சியாக ஆறு டி20 தொடர்களை கைப்பற்றி சாதனை படைத்த இந்தியா

Report Print Kabilan in கிரிக்கெட்
382Shares
382Shares
lankasrimarket.com

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம், இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு டி20 தொடர்களில் வென்று சாதனை படைத்துள்ளது.

இந்திய அணி விராட் கோஹ்லியின் தலைமையில் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இதன்மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு டி20 தொடர்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

  • அயர்லாந்துக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி
  • இலங்கை-வங்கதேசத்துடனான முத்தரப்பு தொடர் வெற்றி
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் வெற்றி
  • இலங்கைக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வெற்றி
  • நியூசிலாந்துக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் வெற்றி

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்