இந்திய அணியிடம் பணிந்தது இலங்கை! அபார வெற்றியின் மூலம் பதிலடி

Report Print Raju Raju in கிரிக்கெட்
282Shares
282Shares
lankasrimarket.com

19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி வீழ்த்தியது.

இந்திய அணியின் 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையடி வருகிறது. இரு அணிகளிக்கிடையேயான போட்டிகள் யூத் கிரிக்கெட் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இலங்கை 2 வெற்றிகளையும் இந்திய அணி ஒரு வெற்றியும் பெற்று இருந்தன.

இந்நிலையில் நான்காவது யூத் கிரிக்கெட் போட்டி நேற்று மொராடுவா மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ஓட்டங்களை குவித்தது.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 37.2 ஓவர்களில் 143 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட யூத் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்