முதல் ஓவரிலே இந்திய வீரர் முரளி விஜயின் ஸ்ட்ம்பை தெறிக்கவிட்ட ஆண்டர்சன்: வெளியான வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்
454Shares
454Shares
lankasrimarket.com

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் முதல் ஓவரிலே ஆண்டர்சன் பந்து வீச்சில் போல்டாகி வெளியேறியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது.

நேற்று முழுவதும் மழை பெயததால், ஆட்டம் தடைபட்டது.

இதையடுத்து இன்று நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன் படி இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக, விஜய், கே.எல்.ராகுல் களமிறங்கினர்.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்....

போட்டியின் முதல் ஓவரை இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீச அதை எதிர்கொண்ட முரளி விஜய் முதல் நான்கு பந்தையும் தடுத்து விளையாடினாலும், ஐந்தாவது பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்து விக்கெட்டை இழந்தார்.

அது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்