செய்திகள் - 28-07-2012
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 11:58 PM]
தங்களுடன் நல்லுறவைப் பேணும் அரசியல் கைதிகளை மட்டும் விடுதலை செய்து விட்டு ஏனைய கைதிகளைத் தொடர்ந்தும் இலங்கை அரசு தடுத்து வைத்துள்ளது என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றம் சாட்டியுள்ளது.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 11:44 PM]
லண்டனில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்க பிரித்தானியப் பொலிஸார் மறுத்ததை அடுத்து, அவரின் லண்டன் விஜயம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 09:09 PM] []
தமிழீழ தேசத்தின் விடுதலைக்கான விலைமதிப்பில்லாத தமது இனிய இளைய உயிர்களை அர்ப்பணித்துவிட்ட எங்கள் மாவீரர்களின் அன்புக்குரிய பெற்றார் குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்கள் பொதுமக்களுக்காக, மாவீரர்நாள் பிரான்ஸ் ஏற்பாட்டுக்குழு இந்த வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 08:32 PM]
இறுதிப் போர் நடைபெற்ற கிளிநொச்சி, பரந்தன், முள்ளிவாய்க்கால், புதுக்குடி​யிருப்பு முதலான இடங்களுக்கு யார் வேண்டுமானாலும் இப்போது தாராளமாகச் சென்றுவர அனுமதிக்கப்படுகிறார்கள் என்ப​தைப் பத்திரிகைகளில் படித்திருந்தபோதும், தயக்கத்​தோடுதான் புறப்பட்டோம்.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 08:18 PM]
'சர்வதேசத்தின் உதவியை நாடாமல் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் இணைந்து கொள்ளுங்கள்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார் இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 05:55 PM]
சிறிலங்கா விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை எவ்வித நடவடிக்கைகளையும் எடுத்துவிடாமல் தடுக்க நியமிக்கப்பட்டதே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நில்லிணக்க ஆணைக்குழு.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 04:31 PM]
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த சிலரால் தேர்தல் சட்ட விதிகள் மீறப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 04:21 PM]
நேற்று முன்நாள் கனடாவில் இருந்து வந்த நடராஜா ஜெகநாதன் கடத்தப்ட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த அதேவேளை அவரின் உறவினர்களும் அவர் கடத்தப்ட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 04:14 PM]
ஜனாதிபதி செயலகத்தில் சுயதொழில் முயற்சிக் கடன் உதவிக்கு தெரிவு செய்யப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் நாளை மாவட்ட செயலகத்திற்கு சமூகம் அளிக்குமாறு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் அறிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 04:04 PM]
நல்லூர் உற்சவ காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 2ஆம் திகதியிலிருந்து மேலதிகமாக 100 பொலீஸார் நல்லூர் ஆலய சுற்றாடலில் கடமையில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா இன்று தெரிவித்தார்.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 03:22 PM]
தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான மாகாண சபை முறைமையையும் தமது அரசியல் அபிலாiஷைகளைப் பூர்த்தி செய்யும் தன்மையற்றது என தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 02:57 PM]
மன்னார் நீதவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சனின் வீட்டின் மீது இனந்தெரியாதோர் இன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 02:44 PM]
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பிலான அதிருப்தி வலுத்துவரும் தற்போதைய சூழ்நிலையில், சீனப் பாதுகாப்பு அமைச்சர் லியாங் க்வாங்லீ அடுத்தவாரம் கொழும்பு வரவிருப்பது இந்தியாவிற்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாக இந்தியாவின் உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 02:22 PM]
அணு உலை அமைப்பது குறித்து பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 02:18 PM]
போருக்கு தடை ஏற்படுத்தியதனைப் போன்றே சிலர் அபிவிருத்தி பணிகளுக்கும் தடை ஏற்படுத்தி வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 01:26 PM]
ராஜீவ்காந்தி - ஜெயவர்தன உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டு 25 வருடங்கள் கடந்த பின்னரும், அதனால் அடையப்பட்ட இலக்குகள் எவையும் கிடையாது என்று கேணல் ஹரிஹரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
(2ம் இணைப்பு)
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 01:15 PM] []
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று மாலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 12:54 PM]
இலங்கையர்களை ஊழியர்களாக சேர்த்துக் கொள்வதற்கு ஓமானிலுள்ள 9 நிறுவனங்களுக்கு இலங்கைத் தூதரகம் தடைவிதித்துள்ளது.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 11:18 AM] []
கல்முனையில் இன்று தமிழ் தேசிய கூட்டமைபின் வேட்பாளர் பேராசிரியர் மு.இராஜேஸ்வரன் அவர்களின் முதலாவது பிரசாரம் இன்று அவரது இல்லத்தில் காலை 11 மணியளவில் ஆரம்பமானது.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 11:07 AM]
திமுகவின் டெசோ மாநாட்டில் கலந்து கொள்ளும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 10:22 AM]
தனி ஈழத்தை ஆதரித்தே டெசோ அமைப்பில் இணைந்திருக்கிறோம் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 10:13 AM]
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து இலங்கை போட்டியாளர்களை பங்குகொள்ளாமல் செய்வது மட்டுமன்றி அவர்களை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 09:38 AM]
லண்டனில் நேற்று இரவு ஆரம்பமான ஒலிம்பிக் போட்டி ஆரம்ப விழாவில் நாடுகளின் அறிமுகமும், அணிவகுப்பும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இதனை பிபிசி நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தது.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 09:14 AM]
இலங்கையிலிருந்து விடுதலையாகி இன்று காலை இராமேஸ்வரம் திரும்பிய தமிழக மீனவர்கள், தங்களை இலங்கை கடற்படையினர் அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாக கண்ணீர் மல்க புகார் தெரிவித்தனர்.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 08:44 AM]
யாழ்ப்பாணம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலமான நல்லூர் முருகன் உற்சவகாலத்தில் பலவித கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையினால் அங்கு பாதுகாப்பிற்காக பொலிஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 06:57 AM]
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் 20 உறுப்பினர்களுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 06:45 AM]
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 05:54 AM]
அமைச்சர் ரிசாத் பதியுதீன் விவகாரத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பகிரங்கமாக இன்று ஒன்று கூடி முடிவெடுக்கவுள்ளதாக தெரிய வருகின்றது.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 05:53 AM]
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப செயலாளரும் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான எஸ்.செல்வேந்திரன் தான் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 05:48 AM]
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்க தயாரான 47 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 05:18 AM] []
கனடாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டர்ஸ் தலைமை அலுவலகத்தில் பொறியியல் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார் கீதா ரவீந்திரன்.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 05:05 AM]
இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்படலாமென பொலிஸாரே எச்சரிக்கும் அளவிற்கு யாழ்ப்பாணத்தில் இராணுவ அராஜகம் தலைவிரித்தாடுவதாக தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் அரசியல் தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம், இதை சர்வதேசம் சரியாக புரிந்துகொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 04:00 AM]
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசின் செயற்திட்டத்தில் எமக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லை. அந்தச் செயற்திட்டத்தை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தாமல் அரசு ஒளிவு மறைவு காட்டுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் சாடியுள்ளார்.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 02:21 AM]
முன்னேஸ்வரம் காளி கோவிலில் நடைபெறம் மிருக பலியைத் தடுக்கக்கோரும் ஆணைகோரும் மனு மீதான வாதப் பிரதிவாதங்களை எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 02:11 AM]
உத்தியோகபூர்வ இணக்கப்பாடு இன்று பணிக்குத் திரும்ப முடியாது என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 02:10 AM]
பிரபுக்கள் என்ற போர்வையில் பிரபுக்கள் என்ற போர்வையில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 02:08 AM]
பிரபாகரனுடன் போர் நடத்தியதனை விடவும் ஆபத்தான தருணம் உதயமாகியுள்ளது. வெட்கம் இருந்தால் 13ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது என தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 02:05 AM]
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக இராணுத் தளபதி லெப்டின் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 01:58 AM]
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகுகள் மூலம் செல்லும் அகதிகளை திருப்பியனுப்புமாறு அவுஸ்திரேலியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 01:45 AM]
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்காக மேற்கொள்ளப்படும் வாழ்வு மாற்ற திட்டத்துக்காக உலகலாவிய ரீதியில் பணியாற்றும் உதவியாளர்கள் அரை மில்லியன் பவுண்ட்ஸ்களை சேகரித்துள்ளதாக “Worcester news” தெரிவித்துள்ளது.
(2ம் இணைப்பு)
[சனிக்கிழமை, 28 யூலை 2012, 01:26 AM] []
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க நாளான இன்று ஒலிம்பிக் விளையாட்டரங்குகள் அமைந்திருக்கும் கிழக்கு லண்டன் பகுதியில் மூன்று இடங்களில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பெருமளவிலான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.
Advertisements
[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.