செய்திகள் - 30-07-2012
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 11:55 PM]
| நீதிமன்ற அனுமதியைப் பெற்று தமிழகத்தில் நடைபெறவுள்ள டெசோ மாநாட்டை இந்திய மத்திய அரசு தடை செய்ய வேண்டும். அது மட்டுமன்றி தி. மு. க. வின் தலைவர் கருணாநிதியை உடன் கைது செய்ய வேண்டும் ௭ன்று ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது. |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 11:31 PM]
| இலங்கையின் சட்டமா அதிபர் அலுவலகத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாததை காரணம் காட்டி தமிழ் அரசியல் கைதிகள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது ௭ன்று பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்க தெரிவித்தார். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 05:02 PM]
| யாழ். போதனா வைத்தியசாலையின் ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட ஏனையோரையும் கட்டாய இடமாற்றம் செய்வதோடு, அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்க யாழ். கிளையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 04:56 PM]
| யாழ். கிட்டுப் பூங்காவை இடித்ததோடு அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்புகள் இரவோடு இரவாக களவாகக் கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக பக்கச்சார்பின்றி விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மாநகர சபை எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 04:14 PM]
| யாழ். ஆணைக்கோட்டை, முள்ளிப் பகுதியில் கத்தி குத்துக்கு இலக்காகிய குடும்பப் பெண் ஒருவர், யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 04:12 PM]
| இரண்டரை ஆண்டில் 2500 சிறுமிகள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு அறிவித்துள்ளது. |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 04:09 PM]
| மக்களை திசை திருப்பும் நோக்கில் ஆளும் கட்சியின் கடைநிலை அரசியல்வாதிகளே தண்டிக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயன்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 03:51 PM]
| களுத்துறை பிரதேசத்தில் உள்ள பல்பொருள் வர்த்தக நிலையக் கட்டடத் தொகுதியொன்றின் கழிவறையில் இருந்து வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 03:32 PM]
| நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தேர்தல் ஆணையத்தின் புதிய நியமனங்கள் குறித்து ஊடக அறிக்கையொன்றினை வெளியிடப்பட்டுள்ளது. |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 03:10 PM]
| விமானப்படை, கடற்படை அதிகாரிகள் பயிற்சியொன்றில் ஈடுப்பட்டிருந்தபோது மரக்கிளையொன்று முறிந்து விழுந்ததில் 17பேர் காயமடைந்த நிலையில் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
(2ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 02:51 PM]
| யாழ் சட்டத்தரணிகள் தாங்கள் மேற்கொண்டுவரும் பணிப் பகிஷ்கரிப்பை இடைநிறுத்திவிட்டு எதிர்வரும் வியாழக்கிழமை முதல் பணிக்கு திரும்புவதாக யாழ். சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 02:37 PM]
| யாழ். நல்லூர் பகுதியில் பக்தர்களுக்கு மயக்க மருந்து தெளித்து தங்க நகைகளை திருட முயற்சித்த இருவர் இன்று திங்கட்கிழமை காலை யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 02:21 PM]
| கிழக்கு மாகாண சபை உரிய நேரத்திற்கு முன்னர் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 01:46 PM] [  ]
| அமெரிக்காவினால் பயங்கரவாத முத்திரைக்குத்தப்பட்டு தேடப்பட்டு வரும் இலங்கை தமிழ் பிரஜை அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டால் இலங்கையில் பல்வேறு இன்னல்களிற்கும் முகம் கொடுக்க நேரிடுமென அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் நிக்கோலா ரொக்சோன் தெரிவித்துள்ளார். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 01:19 PM] [  ]
| தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் வீ. தனபாலசிங்கம் எழுதிய ஆசிரியர் தலையங்கள் கொண்ட 2வது நூல் “நோக்கு” நேற்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது. |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 01:01 PM]
| கடவுச்சீட்டுகள் களவாடப்படும் போதோ அல்லது தொலையும் போதோ, அதன் உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 11:33 AM]
| தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உதவிச் செயலாளர் அ.செல்வேந்திரன் இராஜினாமா செய்யவில்லை. கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியமையால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 11:21 AM]
| கடந்த பொது தேர்தலில் நுவரெலிய மாவட்டத்திலிருந்து ஐதேக பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீரங்கா எம்பியை, நடுநிலையான நடத்துனரின் பங்குபற்றலுடன் கூடிய நேரடி ஒளிபரப்பு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தம்முடன் கலந்துகொள்ள தயாரா என கேட்டு பகிரங்க அழைப்பை ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ளது. |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 10:43 AM]
| அவுஸ்திரேலியாவில் இருந்து மற்றுமொரு இலங்கை தமிழர் விரைவில் நாடுகடத்தப்படவுள்ளார். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 10:04 AM]
| குமார் குணரத்னம் தனது காலில் விழுந்து வணங்கி உயிர்ப் பிச்சை தருமாறு வேண்டி நின்றார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா லங்கா தீப பத்திரிகையுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 09:32 AM]
| அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்றதாக கூறப்படும் மூன்று படகுகளை கடற்படையினர் நேற்றிரவு கைப்பற்றினர். இப்படகுகளிலிருந்து 103 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 08:11 AM]
| மன்னார் நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து சட்டத்தரணிகள் மேற்கொண்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இன்று எட்டாவது நாளாகவும் தொடர்ந்து மன்னார் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 07:39 AM]
| முள்ளிவாய்க்காலில் எமது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததை எக்காளமிட்ட பேரினவாத சக்திகள், எமது அரசியல் ரீதியான போராட்டம் ஆயுதப் போராட்டத்தை விட வீரியம் கொண்டதாக எழும்போது அதனைக்கண்டு அச்ச நிலையில் உள்ளன' என்று கிழக்கு மாகாணசபை தேர்தல் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 07:23 AM]
| கொழும்பு மாநகர சபையின் மாதாந்த அமர்வின் போது செங்கோல் காணாமல் போயுளளதாக தெரிவிக்கப்படுகிறது. |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 06:48 AM]
| கிழக்கு தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெற்றால் மாகாணசபைகளுக்குப் பகிரப்பட்ட காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மீளப்பெற்று மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டு வடக்குத் தேர்தலை நடத்தும் திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதாக விஷயமறிந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 06:47 AM] [  ]
| ஈழ மண்ணில் தமிழ் பெண்களுக்கு எதிராக இந்தியப் படையினர் மேற்கொண்ட பாலியல் வன்முறைகள் பற்றி இத்தொடரில் நிறையவே பார்த்திருந்தோம். |
(2ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 06:39 AM]
| யாழ். அரியாலை காந்தி சனசமூக நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை சேதமாக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 06:26 AM]
| ஐக்கிய நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளுக்கு சலுகை வழங்கும் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 03:49 AM]
| முல்லேரிய சம்பவத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்ட தமது தந்தையான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மரணத்திற்கு, துமிந்த சில்வாவே பிரதான காரண கர்த்தா என சுட்டிக்காட்டியுள்ள மகளான ஹிருணிகா பிரேமசந்திர எதிர்காலத்தில் அரசியலில் குதிக்கப் போவதாகத் தெரிவித்தார். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 03:20 AM]
| தமிழகத்திற்கு தற்போது விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தமிழகத்தின் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியைச் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் பேச்சுக்களை நடத்தியுள்ளார். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 02:13 AM]
| ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வைத்தியசாலையிலிருந்து திரும்பியுள்ளார். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 02:08 AM]
| கட்சியைக் காட்டிக் கொடுப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
|
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 02:02 AM]
| அரசியல் தவளைகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 01:54 AM]
| இராணுவத்திலிருந்து தப்பியோடிய 41ஆயிரம் படைச் சிப்பாய்கள், தமது பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக நீக்கப்பட உள்ளனர். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 01:50 AM]
| இடம்பெயர் மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி முகாம்கள், ஓகஸ்ட் மாதத்தில் மூடப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 01:02 AM]
| உலகத் தமிழர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட பின்புதான் டெசோ மாநாட்டை நடத்த வேண்டும் என்று, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 12:52 AM]
| நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசி தாக்குதல் நடத்தி, விரட்டியடித்ததாக ஞாயிற்றுக்கிழமை மீனவர்கள் தெரிவித்தனர். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 12:50 AM]
| இலங்கையில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்போது யாழ்ப்பாண சனத்தொகை மதிப்பீட்டில் சரியான தகவல்கள் வெளியிடப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 12:32 AM]
| இலங்கையில் தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக எதிர்கொண்ட பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அந்த ஒப்பந்தம் வெற்றியா அல்லது தோல்வியா என்கிற கேள்விகள் இன்றும் தொடருகின்றன. |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 12:23 AM]
| ஹெஜின் உடன்படிக்கை விவகாரத்தில் அரசாங்கம் லண்டன் மேல் நீதிமன்றத்தில் செய்திருந்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அதனைவிட உயர்ந்தமட்டத்தில் உள்ள லண்டன் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மேன்முறையீடு செய்யவுள்ளோம். ௭ன்று பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 12:13 AM]
| கிழக்கு மாகாணத்தில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு ௭ப்படியாவது தேர்தலை வெற்றி கொள்வதற்கான நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் முன்னெடுப்பதாக குற்றம் சாட்டும் பாராளுமன்ற உறுப்பினர் ௭ம். ஏ. சுமந்திரன், தேர்தல் சட்டங்களை மீறி பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். |
[திங்கட்கிழமை, 30 யூலை 2012, 12:00 AM] [  ]
| 30.07.2003 அன்று பன்னாட்டுக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் முருகேசன், மேஜர் இசைநிலவன், மேஜர் புகழினி மற்றும் மேஜர் தனிச்சுடர் ஆகியோரின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். |
|
[ Sunday, 19-05-2013 17:58:55 ] [  ]
| முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. |
|