செய்திகள் - 02-08-2012
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 05:48 PM] []
கொழும்பில் ஆரம்பமாகவுள்ள இந்திய உற்பத்திகளை கொண்ட கண்காட்சி ஆரம்ப விழாவில் கலந்து கொள்ளும் வகையில், இந்திய மத்திய அரசின் கைத்தொழில், வணிகம், மற்றும் நெசவுத் துறை அமைச்சர் ஆனந்த்சர்மா உள்ளிட்ட இந்திய வர்த்தக பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்று இரவு இலங்கை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 05:07 PM] []
இனப் பிரச்சினைக்கான தீர்வு இலங்கைக்குள்ளேயே இருக்கின்றது. என தெரிவித்துள்ள பிரித்தானிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் ஜேம்ஸ் வார்டன், அதற்கான பிரித்தானிய அரசாங்கம் தனது பங்களிப்பை நிச்சயம் வழங்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 04:26 PM]
இலங்கை மக்கள் வங்கியின் யாழ். பல்கலைக்கழக கிளையில் கடமையாற்றிய ஊழியர் ஒருவர் கிளையில் அடகு வைக்கப்பட்டிருந்த 7 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் தலைமறைவாகியுள்ளார்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 04:04 PM]
எம்.பீ. அல்பினோ (MV Albino) என்ற கப்பலில் ஊழியர்களாக பணியாற்றிய ஆறு இலங்கையர்கள், சோமாலிய கடற்கொள்ளையர்களால் பணயமாக பிடிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 03:59 PM]
டெசோ நடத்தும் மாநாடு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. மாநாட்டில், தமிழ் ஈழம் குறித்த தீர்மானம் வரவில்லை என்றாலும், குறைந்தது கீழே குறிப்பிட்டுள்ள முடிவுகளையாவது வலியுறுத்த வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு. என கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 03:45 PM]
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா இலங்கைக்கு வந்தவுடன் அவரை உடனடியாகக் கைது செய்யுமாறு பாரத லக்ஷ்மனின் மகளான ஹிருணிகா பிரேமச்சந்திர பொலிஸ்மா அதிபரைக் கேட்டுள்ளார்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 03:00 PM]
மண்ணெண்ணை குக்கர் அடுப்பை பற்றவைக்க  முற்பட்டபோது அது திடீரென வெடித்து சிதறியதால் எரிகாயங்களுக்கு உள்ளான இளம் பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளாதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 02:55 PM] []
எகிப்து, தியுனீசியா, ஏமன் ஆகிய நாடுகளில் ஆரம்பித்திருக்கும் “அரபுலகின் வசந்தம்” என்கிற எழுச்சி முஸ்லிம் உலகின் பார்வையைத் திருப்பி விட்டிருக்கிறது. அதன் தாக்கம் முஸ்லிம் உலகம் முழுவதும் அதிரத் தொடங்கியுள்ளது. அந்த அதிர்வுகள் கிழக்கு தேர்தலில் தெரிய வேண்டும் என்பதே முஸ்லிம் காங்கிரசின் நோக்கமாகும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 02:34 PM] []
மட்டக்களப்பு, நொச்சிமுனை மீள்குடியேற்ற மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவி சந்திரமோகன் அனுசியா எட்டு அம்ச குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 02:09 PM]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு தகவல் வழங்கியதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 01:48 PM]
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் பயணம் மேற்கொண்டவர்களை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், கடற்படையுடன் தொடர்பு கொண்டு கைது செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 12:43 PM] []
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 22ம் நாள் சிவந்தன் அவர்களால் தொடங்கப்பட்ட உண்ணாவிரதம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 12ம் திகதியுடன் நிறைவடைய உள்ள இந்நிலையில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 12:29 PM]
யாழ். போதனா வைத்தியசாலையில் 13 வயதான சிறுமியொருவர் குழந்தையொன்றை பிரசவித்துள்ளதாகவும் இக்குழந்தை இறந்த நிலையில் அக்குழந்தையின் தாயான சிறுமி வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 11:46 AM] []
ஹிரோஷிமா மீதும், நாகசாகி மீதும் குண்டு வீசப் பல போர் விமானங்கள் பறந்து சென்றன. ஆனால், முதல் குண்டை, அதற்கான பட்டனைத் தட்டிவிட்டு வெடிக்க வைத்தவன் கிளவ்டி ஈதர்லி. 2ம் உலகப் போரில் ஹிரோஷிமா மீது அமெரிக்கப்படைகள் அணுகுண்டு வீசியதின் 67 ம் வருட நினைவு நாள் ஆகஸ்ட் 6.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 11:09 AM] []
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பாராளுமன்றத் தூதுக் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கண்டி ஜனாதிபதி மாளிகையில்  இன்று காலை சந்தித்து உரையாடினர்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 10:37 AM] []
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் இப்போது வறட்சி காரணமாக பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சிறுபோகத்தின் போது பெய்யவேண்டிய மழை இம்முறை ஏமாற்றிவிட்டது.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 10:17 AM] []
தமிழீழம் என்ற சொல்லுக்கு விடைகண்டு தமிழரின் வரலாற்றை புரட்டியவர்கள், அரசியலாக இருந்த தமிழீழத்தை, எம்கண்முன்னே காட்டி மறைந்தவர்கள், காலத்தால் அழியாதவர்கள், தமிழீழத்தின் கலங்கரை விளக்குகள், வாழ்கின்ற எம் முன் மறைந்து நிற்கின்ற இவர்களின் நினைவை அழிப்பதற்கு ஆக்கிரமிப்பாளர் முயன்றால் அது நிச்சயம் தோற்றுப்போகும்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 09:45 AM]
தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பிரதேச மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 09:41 AM] []
முள்ளிவாய்க்காலோடு எல்லாமே முடிந்துவிட்டது என்று முணுமுணுத்துக்கொண்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அது ஒரு திருப்பம். சிவந்தனின் உண்ணாவிரதமு​ம் ஐந்து அம்ச கோரிக்கைகள் தொடர்பாகவும் வழங்கியுள்ள நோ்காணலில் காசி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 08:07 AM]
இலங்கை இராணுவத்தால் நடத்தப்படவுள்ள பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்குகொள்வதற்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு பெரும்பாலான நாடுகள் பதில் எதுவும் கூறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 07:54 AM]
திருகோணமலை- கும்புறுப்பிட்டி காட்டில் ஆயிரம் கிலோ எடையுள்ள குண்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக  இலங்கை இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 07:45 AM]
வன்னிப் போரில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது சிறிதுகூட கண்ணீர் சிந்தாத கருணாநிதி நடத்தும் டெசோ மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப் பங்கேற்கக் கூடாது என்று டெலோ அமைப்பின் அரசியல் உயர் பீட உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான சிறிகாந்தா கூறியுள்ளார்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 07:40 AM]
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பான தேசிய செயற்திட்டத்தினை அரசாங்கம் வெளியிடப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்புத் தெரிவித்துள்ளது.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 07:09 AM] []
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருக்கும் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரை வரவேற்க அதிகாரிகள் எவரும் வருகை தராததால், பாராளுமன்ற உறுப்பினர்கள் உலங்குவானூர்தியில் காத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 07:04 AM]
2009ம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த பயங்கரவாதி பஞ்சாப் மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையின்போது பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 06:59 AM]
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இலங்கை அரசின் ஊடாக இந்தியாவினால் வழங்கப்படும் உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சரியாகச் சென்றடையாத காரணத்தினால் நிதி உதவிகளை நேரடியாக அந்த மக்களிடமே வழங்குவது குறித்து இந்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 06:55 AM]
நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பிலான அறிக்கை சட்ட மா அதிபர் பாலித பெர்னாண்டோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 06:52 AM]
ஐக்கிய தேசியக் கட்சியின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள உள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 03:33 AM] []
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற அகதிப்படகொன்று கொக்கோஸ் தீவுக்கருகில் பாறையில் சிக்கிக் கொண்டதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 02:29 AM]
இலங்கைக்கு கறுப்புப் பட்டியல் இடப்பட்ட நிறுவனமொன்றிடமிருந்து டீசல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 02:19 AM]
ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 02:08 AM] []
இலங்கையில் 1983 யூலை 23, தாயகத்தில் தமிழ் மக்கள் மாபெரும் இனப்படுகொலையில் சிக்கி ஆயிரக்கணக்கான உயிர்களையும் பெறுமதிமிக்க தமது உடமைகளையும் இழந்து துடித்த நாள். இந்நாளை நினைவுபடுத்தியும் மற்றும் தமிழர்கள் மீது சிங்கள அரசு தொடுக்கும் இனவழிப்பை உள்ளடக்கியும் யேர்மன் Göttingen நகரில் தமிழ் இளையோர்களால் கவனயீர்ப்பு நடைபெற்றது
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 01:55 AM] []
பலாலி வான்படைத் தளம் மீதான தாக்குதலின்போது வீரகாவியமான கரும்புலிகள் மேஜர் ஜெயம், கப்டன் திரு, கப்டன் திலகன், கப்டன் நவரட்ணம், லெப்.ரங்கன் மற்றும் வேவுப்புலி மேஜர் சேரன் ஆகியோரின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 01:38 AM]
மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், மன்னார் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மங்கள வாத்தியம் இசைக்கப்படவுள்ளதாகவும் சில ஊடகவியலாளர்களுக்கு கெட்டகாலம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் மன்னாரைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 01:04 AM] []
"தமிழ்-மறுக்கப்பட்​ட அடையாளம்" எனும் மாநாடு கடந்த ஜுலை மாதம் 28ஆம் திகதி Palazzo delle Aquile – Sala delle Lapidi யில் தமிழ் இளையோர் அமைப்பினாலும் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையினாலும் ஒழுங்கு செய்யப்பட்டது.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 12:48 AM]
நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்டுள்ள பரிந்துரைகளில் காணாமல் போனவர்கள் போன்ற முக்கியமான பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை ௭டுக்காத அரசாங்கம் தேசிய வேலைத்திட்டம் தயாரிப்பதில் ௭ந்தப் பயனும் இல்லை ௭ன்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 12:42 AM]
நல்லிணக்க ஆணைக்குழு விடயத்திலும், பாராளுமன்றத் தெரிவுக்குழு விவகாரத்திலும் அரசாங்கம் வெற்றிகொள்ளாவிடின் அடுத்த மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இலங்கைக்கு சவாலானதாக அமைந்து விடும். ௭ன்று அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 12:29 AM]
அவுஸ்திரேலியாவுக்குச் சட்டவிரோதமாகச் செல்பவர்கள் கண்டிப்பாக மீண்டும் தாய் நாட்டுக்குத் திருப்பியனுப்பப்படுவர் என வெளிவிவகார பிரதியமைச்சர் நியூமல் பெரேரா தெரிவித்தார்.
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 12:19 AM]
இலங்கைத் தமிழர்களின் காயங்களுக்கும், துயரங்களுக்கும் மருந்து போடவே டெசோ மாநாடு நடத்தப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.  இது தொடர்பாக நேற்று புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
[வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 12:03 AM]
ராஜகிரிய – ஒபயசேகரபுரவிலுள்ள ஜாவமியு தாரில் ஈமான் பள்ளிவாசலுக்கு பௌத்த பிக்குகள் தலைமையில் சென்ற குழுவொன்று அங்கு தொழுகை நடாத்துவதற்குத் தடைவிதித்துள்ளதுடன் பள்ளிவாசலை மூடிவிடுமாறும் உத்தரவிட்டுள்ளது.
Advertisements
[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.