செய்திகள் - 04-08-2012
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 11:57 PM] [  ]
| சர்வதேச நாடுகள் தமிழ் ஈழத்தை அங்கீகரிக்கக் கோரியும், தமிழ் ஈழம் பற்றி பேசக்கூடாது என மிரட்டும் இந்திய அரசை கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரியும், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் சென்னையில் இன்று (04.08.2012) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 11:37 PM] [  ]
| அன்று, நல்லூர் வீதியிலே அமைக்கப்பட்ட உண்ணாவிரத மேடை நடுவில் வைக்கப்பட்டிருந்த கதிரையில் சரியாக காலை 9.45 மணிக்கு வந்து அமர்கின்றார் திலீபன் அண்ணா. அத்தோடு சூடுபிடிக்கின்றது உண்ணாவிரதக் களம். அருகே மேடைகள் முளைக்கின்றன. |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 05:11 PM]
| மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சைகுளத்தில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 04:27 PM]
| இன்று முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து அவர்களுடைய பள்ளிவாசலில் சுதந்திரமாக அவர்களுடைய தொழுகைகளை நிறைவேற்ற வழிசெய்து தராத இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அஸாத் சாலி தெரிவித்தார். |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 03:59 PM] [  ]
| முல்லைத்தீவு, மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் விஜயம் செய்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதிகளை பார்வையிட்டதுடன், முள்ளிவாய்க்காலில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 03:40 PM] [  ]
| தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கையுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்திய அரசின் சார்பில் வணிக குழு ஒன்று இலங்கைக்கு சென்றுள்ளது. |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 03:07 PM]
| 28 தொன் ஆயுதங்களை விடுதலைப்புலிகளுக்கு அனுப்ப முயற்சித்த மெல்பேர்ன் சர்வதேச பாடசாலையின் முன்னாள் தலைவரான துளசிதரன் சந்திரராஜா என்பவரை இலங்கைக்கு நாடு கடத்த அவுஸ்திரேலியா அரசாங்கம், கடந்த முதலாம் திகதி தீர்மானித்துள்ளது. |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 02:14 PM]
| திருகோணமலையில் இந்திய வர்த்தக வலயமொன்று அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 02:06 PM]
| அரச இரகசியங்களை வெளியிட முடியாது. தகவல்களை அறிந்து கொள்ளும் சட்டத்தின் ஊடாக அரச இரகசியங்களை வெளியிட நேரிடும் என ஊடக அமைச்சின் செயலாளர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார். |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 01:21 PM]
| யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் பெண்ணொருவருக்கு தவறாக சிகிச்சை அளித்த வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
|
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 01:00 PM]
| நாம் வெற்றியடைவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. எமக்கு வெற்றி நிச்சயம். இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 12:36 PM]
| சந்திரிகாவுக்கு ரணில் விக்கிரமசிங்க தகவல்களை வழங்கினாரென்ற அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் கூற்றை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளது. |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 12:22 PM] [  ]
| தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்களால் அறிவிக்கப்பட்டு நடாத்தப்படவிருக்கும் TESO மாநாட்டுப் பெயர்வழி நோக்கம் என்னவோ அழகானதாகவும், அர்த்தம் தோய்ந்ததாகவும் கானப்பட்டாலும்கூட, இது முற்று முழுதான கலப்படமற்ற கருணாநிதியின் அரசியல் நாடகமாகவே தமிழீழ மக்களாகிய எம்மால் நோக்கப்படுகின்றது. |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 11:26 AM] [  ]
| முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் மீள்குடியேற்றத்துக்கென அழைத்து வரப்பட்ட போதும், இதுவரை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 09:54 AM]
| ஹொங்கொங் என்றால் வைரம் வியாபாரம்தான் எல்லோருக்கும் தெரியும். பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த இந்த நகரம் குத்தகைக் காலம் முடிந்து 1997ல் சீனா வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் ஹொங்கொங் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாகும். |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 08:56 AM] [  ]
| பிரபல பத்திரிகையான உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த சட்டத்தரணி விரைவில் கைது செய்யப்படுவார் என்று யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார். |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 08:38 AM]
| இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக சட்டமன்றத் தீர்மனத்தை மதிக்காமல் இலங்கையில் நடைபெறும் வர்த்தகக் கண்காட்சியில் தமிழக நிறுவனங்களான டிவிஎஸ், அசோக் லேலண்ட் போன்றவை பங்கேற்றுள்ளமைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 08:17 AM]
| கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு பிறகு மிக நேர்மையாக பேசுவதற்கு எங்களுக்கு அந்தஸ்தை தாருங்கள். அநியாயத்தை தட்டிக் கேட்பதற்கு எங்களுக்கு அந்தஸ்து இல்லையென்றால் ஆட்சிக் கதிரைகளில் இருப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 07:51 AM]
| சுவிசில் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் மூன்றாவது நாளைக் கடந்து நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 07:49 AM]
| மன்னார் நீதிவான் மீதான அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் இலங்கை வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் இரகசிய பொலிஸார் விசாரணைகளை நடத்தினர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 07:35 AM] [  ]
| பரந்தன் பகுதியில் சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது காவியமான 67 மாவீரர்களினதும், இதன்போது கிளிநொச்சிப் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சு மற்றும் வான் தாக்குதல்களில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் வெண்நிலவன், கப்டன் உத்தமன் ஆகியோரினதும் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 07:13 AM] [  ]
| வன்னேரிக்குளத்தில் 10 வருடங்களுக்கு மேலாக ஆதரவற்ற முதியவர்களின் அடைக்கலமாக ஆதாரமாக ஆத்ம நிம்மதியாக இருந்து வந்த யோகர் சுவாமி திருவடி நிலைய முதியோர் இல்லம், நூற்றுக்கு மேற்பட்ட முதியவர்கள் பயன்பெற்ற இந்த நிலையம் அழிவுக்கு உள்ளாகியதோடு இங்கிருந்த முதியவர்களும் ஆதரவை இழந்தனர். |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 07:12 AM]
| 1994 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் காமினி திசாநாயக்கவின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பிலான உளவுத் தகவல்களைதமக்கு ரணில் விக்கிரமசிங்க, தமக்கு வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 06:48 AM] [  ]
| முல்லைக் கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் காவியமான இரு கடற்கரும்புலிகள் உட்பட்ட மூன்று மாவீரர்களினதும், அக்கரைப்பற்றில் வீரச்சாவைத் தழுவிய லெப். ராகவன் என்ற மாவீரரினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 03:30 AM]
| நிந்தவூரில் வைத்து வானில் கடத்தப்பட்ட பாடசாலைச் சிறுமிகள் இருவர் அம்பாறை நகரில் அமைந்துள்ள இராணுவச் சாவடிக்கு முன்னால் இறக்கிவிடப்பட்டுள்ள சம்பவத்தால் நேற்றுமுன்தினம் அப்பகுதியெங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 03:18 AM]
| லஞ்சம் பெற்றுக்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 03:12 AM]
| தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்குமாறு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு, ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 02:47 AM]
| டெசோ மாநாட்டில் சில சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அறிவித்துள்ளார். |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 02:37 AM]
| இந்திய மற்றும் இலங்கை இடையே ஏற்படுத்திக்கொள்ள உத்தேசித்துள்ள சீபா எனப்படும் முழுமையான வர்த்தக ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பான கலந்துரையாடலை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 02:30 AM]
| இலங்கை கடற்படை வடக்கில் மேலும் இரண்டு கடற்படைப் பிரிவுத் தளங்களை அமைத்துள்ளது. |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 02:17 AM]
| புங்குடுதீவு பிரதேசத்தில் நெருப்புக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த பத்து நாட்களினுள் நெருப்புக் காய்ச்சல் நோயாளர்கள் 11 பேர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் நிலையம் அறிவித்துள்ளது. |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 01:56 AM]
| இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும். |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 01:18 AM]
| இலங்கையில் இளைஞர் பாராளுமன்றத்தை கிளிநொச்சியில் அமைக்கவுள்ளதாக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் லலித் பியும் பெரேரா தெரிவித்துள்ளார். |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 01:05 AM] [  ]
| புதுக்குடியிருப்பில் இருந்து ஒட்டுசுட்டான் செல்லும் சாலையில் சற்றுத் தொலைவில் இருந்த இன்னும் அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பங்கர் வீடு உள்ளது. |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 01:00 AM]
| இலங்கையில் தற்போது விநியோகிக்கப்பட்டுள்ள தரம் குறைவான டீசல் கொள்வனவு செய்த அதே நிறுவனத்திடமிருந்து, மேலும் 20,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் சிங்கப்பூரில் இருந்து இலங்கை நோக்கி வந்துகொண்டிருப்பதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 12:54 AM]
| இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்று, தமிழர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பில்லையென பொய்ப்பிரசாரம் செய்து, அங்கு அரசியல் புகலிடம் கோருபவர்கள் அனைவரையும் இலங்கைக்கு நாடு கடத்துமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். |
[சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 12:19 AM]
| பிரான்சுக்கு செல்வதற்காக சென்ற இளம் பெண் ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இனம் தெரியாதவர்களினால் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக யாழ். சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. |
|
[ Saturday, 18-05-2013 12:50:43 ] [  ]
| முள்ளிவாய்க்கால் படுகொலை முணுமுணுக்காத வாய்களே இருக்க முடியாது. தமிழர் தாயகமெங்கும் குருதியால் வரையப்பட்ட காவியம் என்று சொன்னால் மிகையாகாது. |
|