செய்திகள் - 05-08-2012
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 05:56 PM] []
மட்டக்களப்பு நகரில் உள்ள உணவு விடுதிகளில் சுகாதார சீர்கேடான விடுதிகளை கண்டறியும் நடவடிக்கையினை மட்டக்களப்பு பொலிஸாருடன் இணைந்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 04:27 PM]
இலங்கை கடற்படையால் கடந்த வருடம் நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை உடனடியாக விடுவிக்கக் கோரி, ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் ஐந்து நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 03:59 PM] []
மட்டக்களப்பு மாவட்டத்தின் இலங்கை தமிழரசுக் கட்சியின் தொகுதிக் கிளைகளின் ஒன்றுகூடல் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 03:46 PM]
அம்பாந்தோட்டைப் பிரதேசத்திலேயே சகல சாதனைகளும் நிகழ்த்தப்படுவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 03:35 PM]
தந்தை செல்வாவின் பக்குவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மறைந்த ஸ்ரீ.ல.மு.கா தலைவர் அஸ்ரப்பின் பக்குவத்தை முஸ்லிம் மக்களும் பெறும் வரை தமிழ்த் தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒரு போதுமே ஒன்று சேர மாட்டாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்...
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 03:34 PM]
கொழும்பில் அதிகளவான தெருநாய்கள் மர்மமான முறையில் காணாமற்போயுள்ள நிலையில், கொழும்பு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆட்டிறைச்சிக் கடைகளில் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 03:20 PM]
இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் கண்டிருக்கும் முன்னேற்றங்களுக்காக அவர்களை பாராட்டுவதாக அங்கு சென்ற பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் குழு கூறியுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 03:17 PM]
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நான்கு அரசியல்வாதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 03:06 PM]
இலங்கையிலிருந்து லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள விளையாட்டுக் குழுவில் பயிற்சியாளர்கள் எவரும் இடம்பெறவில்லை என்று அந்த அணியின் விளையாட்டு வீரர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 02:20 PM]
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அன்றிலிருந்து இன்று வரை அரசின் கைக்கூலிகளாக இருப்பவர்களுக்கு மக்கள் ஆணை வழங்குவார்கள். அது நிச்சயமாகும் என மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இரா. துரைரெட்ணம் தெரிவித்தார்.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 01:17 PM]
லண்டனின் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான ரிக்கெட்டுகளை இலங்கை வாங்கியுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 10:49 AM]
அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இயலாத நிலையில் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 10:44 AM]
2005ம் ஆண்டில் ஜனாதிபதி வேட்பாளாராக போட்டியிட்ட ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அன்று வெற்றி பெற்றிருந்தால் ரணில் அன்றே வடகிழக்கு இணைத்து அம்மாகாணத்திற்கு சுயஆட்சியையும் வழங்கியிருப்பார்.என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 10:14 AM] []
இனப்படுகொலை அல்லது இன அழிப்பு என்ற சொல்லாடலுக்கு அர்த்தம் கற்பித்த ஒரு வரலாற்றுச் சம்பவம் இது....
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 10:04 AM]
கொழும்பு துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த தாய்வான் நாட்டு சரக்கு கப்பலின் இந்தோனேசியாவைச் சோ்ந்த  மாலுமி கொழும்பு துறைமுகத்தில் திடீரென மரணமானார்.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 09:41 AM]
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதன் மூலம் எமது இனத்தை பிரித்தாள நினைக்கும் பேரினவாதிகளுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் எடுத்துக்காட்ட வேண்டும் என தமிழரசுக் கட்சி தேர்தல் வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 09:17 AM] []
முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரத்தின் காரணமாக, அரசாங்கம் தனித்து ஆட்சியமைப்பதற்கு தேவையான ஆசனங்களை பெறுவதில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடும். இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 09:00 AM]
திருமலை மாவட்டத்திலுள்ள மூதூர் ஜபல் நகர் மலைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவோடிரவாக படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் பெருந்தொகையான சிங்களவர்களும், புத்த பிக்குகளும் பங்குகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 08:37 AM] []
மன்னாரில் பெரிய மடுவைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவரால் வீட்டில் உள்ள உபகரணங்களை தொலை தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தக் கூடிய தன்னியங்கி இலத்திரனியல் சுற்று ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 08:18 AM]
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் வரலாற்றை எடுத்து நோக்கும் போது அநேகமான தேர்தல்களில் தமிழ் மக்களது இனப்பரம்பலுக்கேற்ப, தெரிவு செய்யப்படும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அமைந்திருப்பதில்லை.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 08:11 AM]
வலது குறைந்த இளம் பிள்ளையின் மீது பாலியல் குற்றம் புரிந்து அவரைக் கிணற்றில் தள்ளி வீழ்த்திக் கொலை செய்ய முயன்ற சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நிட்டம்புவ என்னும் இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 07:57 AM] []
திருகோணமலையின் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள மீனவர் ஒருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்போது வெடிக்காத கைக்குண்டொன்றும் வலையில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 07:52 AM]
2012ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் நாளை (06) ஆரம்பமாகின்றன.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 07:45 AM]
மனித உரிமை கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளமுடியாது என இராணுவம் அறிவித்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 07:31 AM] []
அமெரிக்கா வாழ் புலம்பெயர் தமிழர்கள், போரினால் காயமடைந்த, உழைப்பாளரை இழந்த ஆதரவற்ற குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 50 துவிச்சக்கர வண்டிகளை பா.உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டு, இதற்கான நிதிப் பங்களிப்பினை அமெரிக்க புலம்பெயர் தமிழர்கள் மற்றும் மொன்றியல் வாழ் தமிழர்கள் வழங்கியிருந்தனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 06:57 AM]
கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் போலி நாணயத்தாள் வைத்திருந்த நபரொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்த 10ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 05:48 AM]
இசட் புள்ளிகளால் பாதிக்கப்பட்ட 1750 மாணவர்கள் இதுவரையில் மனித உரிமைகள் ஆணையகத்தில் தமது முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 05:44 AM]
யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை மற்றும்  மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு உரிய அனுமதி இன்றி சேவையை நடத்தும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிரான தண்டனை அதிரிக்கப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 05:38 AM]
தரம் குறைந்த டீசலை விநியோகித்தமைக்காக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 05:30 AM]
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவதற்கான அவசியம் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 05:25 AM]
இஸட் புள்ளி குளறுபடிக்கு காரணமான உயர்கல்வி அமைச்சர் ௭ஸ்.பி.திஸாநாயக்கவையும், கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவையும் பதவியிலிருந்து நீக்க வேண்டுமெனக் கோரி பொதுமக்களிடமிருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துகளை இலங்கை ஆசிரியர் சங்கம் பெற்றுள்ளது ௭னத் தெரிவிக்கப்படுகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 05:25 AM]
கொழும்புக்கும், புதுடில்கிக்கும் இடையில் புதிய முறையில் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக காவற்துறை விசாரணைகளில் நிரூபனமாகியுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 05:11 AM]
இலங்கையில் நிலைகொள்ள செய்யப்பட்டிருந்த இந்திய அமைதி காக்கும் படையினரை இந்தியா வெளியேற்றாவிட்டால் அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவோம் என முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ இந்தியாவை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 04:27 AM]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையைச் சேர்ந்த குழு ஒன்று அடுத்த மாத நடுப் பகுதியில் இலங்கை வரவுள்ளது. இதற்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 04:10 AM]
இந்திய இலங்கை உறவை வலுப்படுத்திக் கொள்ளவும் வேலை வாய்ப்பபை அதிகரிக்கவும் ஏற்ற வகையில் இரண்டு நாடுகளினதும் வீஸா நடைமுறைகளில் தளர்வை ஏற்படுத்த இரு நாட்டு குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் பேச்சு நடத்தி வருவதாக இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா நேற்றுத் தெரிவித்தார்.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 04:00 AM]
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஐந்து கைக்குண்டுகளை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வுத் துறையினர் மீட்டுள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 03:19 AM] []
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 22ஆம் நாள், கோபி சிவந்தனால் தொடங்கபட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் பதினான்காவது நாளாக தளராத மனதோடு தொடர்கின்றது.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 03:12 AM]
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் பற்றிய எல்லா உண்மைகளையும் வெளிப்படுத்த தயாராக இருக்கிறோம். எதையும் மறைக்க விரும்பவில்லை.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 02:49 AM]
தென்னிலங்கை பஸ் நடத்துனர்களினாலும் சாரதிகளினாலும் தமிழ் இளைஞர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு பஸ்ஸில் இருந்து கீழே தள்ளிவிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 02:14 AM]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தொடர்பான கேள்விகளுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பதிலளிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 02:07 AM]
நபர்களின் தனிப்பட்ட தரவுகளை பார்வையிட சில நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 01:50 AM]
கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச பாதுகாப்பை கருத்தரங்கை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 12:44 AM]
தமிழ் சமூகம் சம உரிமையைப் பெறுவதற்காக ஏறத்தாழ 60 வருடம் போராடுகிறது. ௭மது போராட்டத்தில் நாம் இன்னும் வெற்றி பெறவில்லை. ௭மது நிலை இன்று இக்கட்டான நிலையிலுள்ளது. நாம் சம உரிமையை பெறுவதற்கு சமஷ்டி ஆட்சி முறையே உதவும். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ௭ம். சுமந்திரன் தெரிவித்தார்.
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 12:24 AM]
துமிந்த சில்வா ௭ம்.பி. சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று நாடு திரும்பியுள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி அவரைக் கைது செய்யுமாறு கொலையுண்ட ஜனாதிபதியின் ஆலோசகர் பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் புதல்வி ஹிருணிகா பிரேமச்சந்திர பொலிஸ் மா அதிபருக்கு தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 12:16 AM]
A9 வீதி கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் பலியானார். இவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள் சாரதி நிறுத்தாது தப்பியோடிவிட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
Advertisements
[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.