செய்திகள் - 11-08-2012
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 11:51 PM]
 இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் அனுசரணையாளராக தென்னாபிரிக்கா செயற்படவுள்ளது. அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதை வரவேற்றுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 11:36 PM]
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும், தமிழர் வாழும் பகுதியில் இருந்து இலங்கை இராணுவத்தினர் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும். உட்பட 20 ற்கும் மேற்பட்ட தீர்மானங்கள் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளன.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 08:49 PM] []
சிவந்தன் கோபி அவர்களது உண்ணாநிலைப் போராட்டம் இன்று இருபத்தியொரு நாட்களை கடந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க பிரான்சிலிருந்து வந்த பன்னிரண்டு தமிழர்கள் அவருடன் இன்றைய நாளைக் கழித்தனர்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 06:05 PM] []
அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை படுகொலையின் 22வது ஆண்டு நினைவுதினம் உணர்வு ரீதியாக நாளை அனுஸ்டிக்கப்படுகின்றது.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 05:42 PM]
தேர்தல் முறைப்பாடுகளை பொலிஸார் ஏற்றுக் கொள்ள மறுப்பதன் மூலமும், பொலிஸ் நிலையங்களில் பாரிய ஊழல் மோசடி நடைபெறுவதற்கான ஆரம்பமாக இருக்கும் என்ற சந்தேகம் தோன்றுகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 04:44 PM]
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதிய மாணவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் சம்பள படிகள் இதுவரையில் வழங்கப்படாமை தொடர்பில் மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
(2ம் இணைப்பு)
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 04:04 PM] []
திமுக நாளை சென்னை நடத்தவிருக்கும் தமிழீழ ஆதரவாளர் அமைப்பான டெசோவின் மாநாடு பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து எதிர்நோக்குகிறது. இலங்கையில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிவரும் ஈழத்தமிழர்களுடைய வாழ்வுரிமையை பாதுகாப்பதே இம்மாநாட்டின் நோக்கம் என்று கருணாநிதி தெரிவித்திருந்தார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 03:38 PM] []
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றாக இருந்து பேசி ஒரு முடிவுக்கு வருவதற்காக நான் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மட்டக்களப்பில் வைத்து இன்று தெரிவித்தார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 03:08 PM]
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்தும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு, பொலிஸ் மற்றும் தேர்தல் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 02:47 PM]
2012ம் ஆண்டு உயர்தப் பரீட்சையிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 02:38 PM]
யாழ். வல்வெட்டிப் பகுதியில் இன்று மாலை 6:30 மணியளவில் துப்பாக்கி வெடிச் சத்தம் போன்ற சத்தம் சுமார் பத்து நிமிடங்கள் நீடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 02:30 PM]
பேஸ் புக் சமூக வலையமைப்பு ஊடாக அவதூறு ஏற்படுத்தினால் வழக்குத் தொடர்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தொடர்பாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 02:14 PM]
தமிழ் அரசியல் கைதியான மரியதாஸ் டில்ருக்சனின் அடக்க ஆராதனை பாசையூர் அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மாலை நடை பெற்றது.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 02:06 PM]
கொழும்பு,  மாளிகாவத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த  தேயிலைத் தூள் களஞ்சியசாலை ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 01:48 PM]
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகியன இன்று அரசியல் மேடையில் இரண்டு சவால்களை விடுத்துள்ளன.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 01:38 PM]
சென்னையில் நாளை நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 01:19 PM]
தமிழ் மக்கள் த.தே.கூட்டமைப்புக்கு அளிக்கும் வாக்கு, எமக்குரிய தீர்வை உடன் வழங்க வேண்டும் என்ற செய்தியை அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துக் காட்டுவதாக அமையும். மாறாக இந்த அரசாங்கத்திற்கு அளிக்கும் வாக்கு, அரசாங்கத்தின் அராஜக நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்குவதாக அமையும் வேட்பாளர் சோ. யோகானந்தராஜா தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 01:13 PM]
கடந்த வருட உயர்தரப் பரீட்சை இசட் வெட்டு புள்ளி காரணமாக அசௌகரியங்களை  எதிர்நோக்கிய மாணவர்கள் தற்போது 3550 முறைப்பாடுகளை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளனர்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 12:43 PM]
சிங்கள, தமிழ் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கைக்கு வியஜம் செய்ய வேண்டுமென ஜனதா கட்சியின் தலைவரான சுப்பிரமணிய சுவாமி இன்று கோரியுள்ளார்.
(3ம் இணைப்பு)
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 11:57 AM] []
வவுனியா சிறைச்சாலை அதிகாரிகளின் தாக்குதலில்  படுகாயமடைந்து மகர சிறைக்கு மாற்றப்பட்டு ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் உயிரிழந்த, தமிழ் அரசியல் கைதியான மரியதாஸ் டில்ருக்சனின் இறுதிக் கிரியைகளும், இறுதி வணக்க நிகழ்வுகளும் இன்று மதியம் இடம்பெற்றன.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 11:41 AM]
சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம் தமிழ் இளம் சமுதாயம் நீதியின்மேல் தாகம் கொண்டு நிற்கிறது என்பதற்கான உதாரணமாகிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவிப் பிரதமர்களில் ஒருவரான உருத்திராபதி சேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 11:36 AM]
டெசோ மாநாடுக்கு அனுமதி கோரி தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க டெசோ மாநாட்டு அமைப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி பால் வசந்தகுமார், இருதரப்பினரையும் சரமாரியாக கேள்விகள் கேட்டார். மேலும் இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 11:17 AM]
திமுக நடத்தவிருந்த ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 11:04 AM] []
என்னிடம் இருந்து பிரிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பெயரைத் தனது கையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார் சென்னையைச் சேர்ந்த உணர்வாளர் க.சி.வாசன்.
(3ம் இணைப்பு)
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 10:18 AM] []
டெசோ மாநாட்டில் தமிழீழ மக்களுக்கு  நம்பிக்கை இல்லை எனவும், தமிழ் மக்களை ஏமாற்றுவதே இம்மாநாட்டின் நோக்கம் என்றும்  லண்டனில் இன்று இருபத்தோராவது நாளாகவும் உண்ணாவிரத்த்தை தொடர்ந்துகொண்டிருக்கும்  கோபி சிவந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 09:20 AM]
சிங்களப் பேரினவாத அரசு நடத்திய ஈழத்தமிழ் இனப்படுகொலைக்கு, முழுக்கமுழுக்க உடந்தையாக இருந்து, தமிழ் குலத்துக்குத் துரோகம் இழைத்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில், பங்கேற்றுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட அழிவுக்கு அவரும் ஒரு பொறுப்பாளி ஆவார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 09:06 AM]
தி.மு.க.வின் ஏற்பாட்டில் சென்னையில் நடைபெறவிருந்த டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தாக்கல் செய்துள்ளது.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 08:14 AM]
கண்டி போதனா வைத்தியசாலையில் இன்று முற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 08:06 AM] []
சென்னையில் நாளை நடைபெறவிருக்கும் டெசோ மாநாடு, ஈழத்தமிழர்களின் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து நடாத்தப்பட வேண்டும் என தமிழீழ மலேசிய நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரலிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 07:17 AM] []
டெசோ மாநாட்டில் ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது, இலங்கை அரசியல் வாதிகள் பலர் டெசோ மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டோம் என பல சர்ச்சைகள் எழுந்துகொண்டு இருக்கின்றது.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 07:11 AM] []
வவுனியா சிறைச்சாலை கலவரத்தில் படுகாயமடைந்து மஹர சிறைக்கு மாற்றப்பட்டு, கோமா  நிலையில் இருந்து அண்மையில் ராகம மருத்துவமனையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான டில்ருக்ஷன் மரியதாஸின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல்  இடம்பெறவுள்ளன.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 06:54 AM]
 தேர்தல்கள் நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைகளிலும் தேர்தல் சட்டங்களை மீறிய 11  பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 06:40 AM]
மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் உள்ள சுவிஸ் கிராமத்தை இராணுவத்தினர் சுற்றி வளைத்து சோதனை நடத்துவதுடன் அங்குள்ள வீடுகளுக்கு சென்று மக்களை புகைப்படம் எடுத்து பதிவு செய்து வருவதாக மக்கள் தன்னிடம் புகார் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 06:23 AM]
கவிஞர் வைரமுத்து எழுதிய 'மூன்றாம் உலகப் போர்’  என்னும் நூல் திறனாய்வு விழா நிகழ்வு கடந்த 4-ம் தேதி தேனியில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து அவர்கள் எனது மகனின் வேண்டுகோளுக்கிணங்க நிச்சயமாக, ஈழத் தமிழர் அவலம் குறித்து காவியம் எழுதாமல் நான் போகமாட்டேன் என்று தெரிவித்தார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 05:56 AM]
திருப்பூரில் பொங்கித் தீர்த்துவிட்டார் சீமான். அதுவும் கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக மாநாடு நடத்துகிறேன் எனக் கிளம்பி இருக்கும் நேரம் என்பதால், அனல் அதிகமாகவே இருந்தது!
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 05:13 AM]
கொழும்பின் புறநகர்ப் பகுதியான கொஸ்கொட பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து அதற்கு பின்புறமாகவுள்ள கடலில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 05:03 AM]
ஊடகவியலாளர்கள் மாநாட்டுக்கு அழைத்து விட்டு, இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் தங்களைக் கணக்கெடுக்காத விதத்தில் நடந்து கொண்டமை தங்களை அவமானப்படுத்திய செயலாக தாங்கள் கருதுவதாக ஊடகவியலாளர்கள் முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை வேட்பாளரிடம் தெரிவித்துள்ளனர். 
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 04:47 AM]
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமே தீர்வுத் திட்டம் எட்டப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 04:32 AM]
யுத்த அணுகுமுறைகளில் முன்னாள் விடுதலைப் புலிப்போராளிகள் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதனால் அவர்களை படையில் இணைத்துக் கொள்வதால் இலங்கை படையினருக்கு நன்மை ஏற்படும் என இந்திய அமைதிப் படையில் அங்கம் வகித்த அதிகாரியான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 04:08 AM]
திமுக தலைவர் கருணாநிதியும் அவரது சகாக்களும் உலகத் தமிழர்களை ஏமாற்றும் வகையில் நடத்தவுள்ள டெசோ மாநாட்டில், தாங்கள் பங்குபற்றப் போவதில்லை என்ற முடிவை அறிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மத்திய குழுவையும் அதன் தலைவர் திரு இரா. சம்பந்தனையும் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் பாராட்ட வேண்டும்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 03:47 AM]
கிளிநொச்சியில் நேற்றிரவு வீடென்றில் திருட முற்பட்ட போது திருடன் ஒருவன், பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 03:37 AM]
கூட்டுறவு சட்டதிட்டங்களுக்கு அமைய உருவாக்கப்பட்ட மாதகல் கடற்றொழிலாளர் சங்கத்தை அரசியல் இலாபங்களுக்காக கடற்றொழில் அமைச்சர் கலைக்க முற்படுவதாக வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டப்பினர் தலைவர் சி.தவரட்ணம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 02:33 AM]
தேசிய கீதம் தொடர்பான இசை மட்டும் இசைப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார்.  
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 02:31 AM]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக இலங்கை அரசாங்கம் பின்பற்றிய அணுகுமுறை பாரட்டுக்குரியது என அமெரிக்க பேராசிரியர் எரிக் லெக்னெஸ்கீ தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 02:30 AM]
சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை டி.எஸ். சேனநாயக்க அரசாங்கம் வீழ்ச்சியடையச் செய்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 02:13 AM]
திருகோணமலை, மல்லிகைத்தீவு பகுதியில் கால்நடைகளை மேய்க்கச் சென்ற நபர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 02:07 AM]
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் நியாயங்களை தேட ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிலான பக்கச்சார்பற்ற விசாரணையே ஒரே வழியாகும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்தியாவுக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி ஆனந்த பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 01:13 AM]
வீடமைப்பு திட்டம் ஒன்றுக்காக பெற்றோலியத்துறை பிரதியமைச்சர் சரண குணவர்த்தன கப்பம் கோரியதாக இலங்கை பொலிஸ் மா அதிபரிடமும் லஞ்ச ஊழல் ஆணையகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 12:31 AM]
சென்னையில் நாளை நடைபெறவுள்ள டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர் மாநாட்டில் பங்குகொள்வதற்காக  நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண இன்று சென்னை செல்கின்றார்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 12:22 AM] []
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வெளிவீதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 12:06 AM]
லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின்போது சர்வதேசத்தின் கவனம் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது. இது ஈழத்தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு நடாத்தும் இனவழிப்பு நடவடிக்கைளை அம்பலப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பான சூழலை எமக்கு தந்திருக்கிறது.
Advertisements
[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.