புற்றுநோய் கலங்கள் தானாக அழியக் கூடிய புதிய தொழில்நுட்பம்

Report Print Givitharan Givitharan in நோய்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

மனிதர்களுக்கு சிம்ம சொற்பனமாக விளங்கும் நோயாக புற்றுநோய் காணப்படுகின்றது.

பல வகை புற்றுநோய்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றினை முற்றாகக் குணப்படுத்தக்கூடிய சிகிச்சை முறைகள் இதுவரை கண்டறியப்படவில்லை.

advertisement

இந்நோய்களுக்கு சரியான நிவாரணமாக புற்றுநோய் தாக்கத்துக்கு உள்ளான கலங்களை அழிவடையச் செய்தலே காணப்படுகின்றது.

இதனைக் கருத்தில் கொண்டு புற்றுநோய் கலங்கள் தானாகவே அழியக்கூடிய தொழில்நுட்பத்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் ஊடாக கணையப் புற்றுநோயை வெற்றிகரமாகக் குணப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.

இந்த முறையினை இஸ்ரேலில் உள்ள Tel Aviv பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே கண்டுபிடித்துள்ளனர்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட கலங்களை எலிகளில் மாற்றீடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த உண்மை வெளியாகியுள்ளது.

புற்றுநோய் கலங்கள் விசேட புரதம் ஒன்று செலுத்தப்படுவதன் ஊடாக தானாக அழியச் செய்யப்படுகின்றது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments