அல்சர் பிரச்சனையா? இதை உடனடியாக செய்யுங்கள்

Report Print Printha in நோய்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

ஆரோக்கியமற்ற துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால், அது வயிற்றில் செரிமானத்திற்கு உதவும் அமிலத்தை அதிகப்படுத்தி, வயிற்றின் உட்புற பகுதியின் சவ்வில் அல்சர் புண்களை ஏற்படுத்துகிறது.

அல்சரின் அறிகுறிகள் என்ன?

  • வயிற்றின் மேல் பகுதியில் அதிகமான வலி அல்லது அசௌகரியம்.

  • தினமும் சாப்பிட பிறகு வயிற்றில் வலி ஏற்படும்.

  • அதிகப்படியான வாயு பிரச்சனைகள் ஏற்படும்.

  • அல்சரின் விளைவாக மலத்தின் வழியாக ரத்தம் கசிதல் மற்றும் ரத்த சோகை ஏற்படும்.

அல்சர் ஏற்பட காரணம் என்ன?

அன்றாடம் எண்ணெய் மற்றும் காரமான உணவுகள் சாப்பிடுதல், மன அழுத்தம். சரியான நேரத்தில் சாப்பிடாமல், நேரம் தவறி சாப்பிடுதல், மது அருந்துதல். புகை பிடித்தல் இது போன்ற காரணத்தினால் அல்சர் ஏற்படுகிறது.

அல்சர் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

  • அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் ஆரோக்கியமான உணவு முறைகளை பினபற்ற வேண்டும். தயிர், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.

  • வாழைப்பழம், ஆட்டு பால் அல்லது மாட்டு பால் மற்றும் பாதாம் பால் போன்ற உணவுகள் அமிலத்தின் உற்பத்தியைக் குறைத்து, குடல் புண்களுக்கு நல்ல தீர்வைக் கொடுக்கிறது.

குறிப்பு

உடல் வறட்சி மற்றும் மன அழுத்தம் உடலில் அமில தன்மையை அதிகரித்து குடல் புண்களை உருவாக்குகிறது. எனவே அதிக மன அழுத்தம் கொள்ளக் கூடாது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments