மாரடைப்பு, தீக்காயம் விபத்துக்கள் ஏற்பட்டால் இதை உடனே செய்திடுங்கள்

Report Print Printha in நோய்
0Shares
0Shares
lankasrimarket.com

மாரடைப்பு, தீக்காயம் போன்ற விபத்துகளின் ஆபத்தான காலகட்டங்களில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன், பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்ற சிறிய முதல் உதவி சிகிச்சை மிகவும் அவசியமாகும்.

மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

மார்டைப்பு ஏற்படுவதற்கு முன் படபடப்பு, மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி அல்லது கடுமையான அஜீரணம் ஏற்படுதல், அதிக வியர்வை, தலை சுற்றுதல் இது போன்ற உணர்வுகளுடன் மார்பில் கடுமையான வலியை ஏற்படுத்தும்.

மாரடைப்பு பிரச்சனையின் மூலம் பாதிக்கப்பட்ட நபரை முதலில் நேராக படுக்க வைத்து, அவருக்கு சுவாச மூச்சு நின்று இருந்தால், செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபரின் தலையைப் பின்பக்கம் உயர்த்தி, நாடியை மேல்நோக்கி உயர்த்தி மூச்சுக்குழல் நேராக இருக்குமாறு, செய்து மூக்கின் இருநாசித் துவாரங்களையும் அழுத்தி மூடிக் கொண்டு, பாதிக்கப்பட்டவரின் வாயோடு உங்கள் வாயைப் பொருத்தி மெதுவாக காற்றை உட்செலுத்தி செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும்.

நாம் காற்றை உள்ளிழுக்கும் போது நம் மார்புப்பகுதி மேல் நோக்கி அசைவது போல பாதிக்கப்பட்டவரின் மார்புப்பகுதி மேல் நோக்கி அசைகிறதா என்று பார்க்க வேண்டும்.

ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையை ஒரு டம்ளர் தண்¬ணீரில் போட்டுக் குடிக்க செய்து, நாக்கின் அடியில் ஒரு சார்பிட்ரேட் மாத்திரையை வைக்க வேண்டும்.

தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

முதலில் தீக்காயத்தினால் பாதிக்கப்பட்டவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். உடலில் துணி, நகைகள் ஏதேனும் இருந்தால், அதைப் பிடித்து இழுக்காமல், கத்தரியால் கவனமாக வெட்டி, முழுமையாக நீக்க வேண்டும்.

தீக்காயம் பட்ட இடத்தில், குழாய்த் தண்ணீர் படும்படி 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். தீக்காயம் பட்டவர்களின் உடம்பில் எந்தவித ஆயின்மென்ட்டும் தடவக் கூடாது.

ஒருவர் ஆடையில் தீப்பற்றிவிட்டால், உடனடியாகத் தண்ணீரை அவர் மேல் ஊற்றி, தீ பரவாமல் அணைக்கலாம். தண்ணீர் ஊற்ற வழி இல்லை எனும் போது,

கம்பளி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், கம்பளியை நீண்ட நேரம் உடலில் வைத்திருக்கக் கூடாது.

தலை மற்றும் கழுத்தில் தீக்காயம் இருப்பின், வாய் வழியே குடிக்கவோ, சாப்பிடவோ எதையும் கொடுக்கக் கூடாது. கொப்புளங்கள் தோன்றினால், அதை உடைத்துவிடக் கூடாது.

தீக்காயத்தைக் கையால் தொடாமல், மிகவும் பாதுகாப்பான முறையில் பாதிக்கப்பட்டவரை தூக்கி கொண்டு, மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments