இதை செய்தால் தேமல் பிரச்சனையே வராது

Report Print Printha in நோய்
0Shares
0Shares
lankasrimarket.com

தோலில் ஏற்படுகிற நோய்களில் முதலிடம் பெறுவது தேமல் நோய். இது Malassezia furfur எனும் கிருமி மூலம் உண்டாகிறது.

மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோள், கை, கால் போன்ற இடங்களில் தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட வட்டமாக, திட்டுத்திட்டாகப் படைகள் போன்று காணப்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி.

தேமல் அதிகமாக யாருக்கு ஏற்படும்?

வியர்வை அதிகம் சுரப்பவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஸ்டீராய்டு மாத்திரைகளை நீண்டகாலம் சாப்பிடுபவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆகியோர்களுக்கு தேமல் பிரச்சனை அடிக்கடி ஏற்படுகிறது.

தேமல் பிரச்சனையை குணமாக்க என்ன செய்ய வேண்டும்?

  • இளம்சூடான தண்ணீரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

  • எலுமிச்சை பழச்சாற்றை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வர வேண்டும்.

  • ஆடாதோடை இலையை தேங்காய் எண்ணெயில் போட்டு 1 வாரம் வெயிலில் காயவைத்த பின் அதை தேமல் இருக்கும் இடத்தில் தடவி வர வேண்டும்.

  • மோரில் முள்ளங்கியை அரைத்து, பேஸ்ட் போல செய்து, அதை தேமல் உள்ள இடத்தில் தேய்த்தால், தேமல் மறைந்து விடும்.

  • ஒரு துண்டு வசம்புடன் பூவாரம்பட்டையை சேர்த்து அரைத்து, அந்த கலவையை இரவில் தேமல் உள்ள இடத்தில் பற்று போட்டு வந்தால், நாளடைவில் தேமல் குணமாகும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments