40 நிமிடத்திற்கு மேலான மதிய உறக்கம் ஆபத்தாம்

Report Print Printha in நோய்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

தினமும் ஒருவர் மதிய வேளையில் 40 நிமிடங்களுக்கு மேல் உறங்கினால், அவர்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

டோக்கியோவில் உள்ள யமடா டோமாஹைட் எனும் பல்கலைக் கழகத்தில் நடத்திய ஆய்வில், மதிய நேரத்தில் ஒருவர் 40 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்திற்கு மேல் தினமும் உறங்கினால், சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் ஏற்படும் என்பது தெரியவந்துள்ளது.

advertisement

சர்க்கரை நோய் ஏற்பட்டால், கண் பார்வை குறைபாடு, நரம்பு கோளாறு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் இதயநோய் போன்ற பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படும். ஆனால் மதிய நேரத்தில் உறங்கும் அனைவருக்குமே இந்த பிரச்சனைகள் ஏற்படும் என்று கூற முடியாது.

சர்க்கரை நோய் ஏற்பட ஒருவரின் உடல் பருமன், உணவுப் பழக்கம், மரபு போன்ற காரணத்தை போன்று மதிய நேர உறக்கமும் ஒரு காரணம் என்று வளர்சிதை நோய்க்கான மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.

இது குறித்த ஆய்வின் முடிவில், மதியம் அதிக நேரம் உறங்குவதால், அவர்களை பாதிப்பது சர்க்கரை நோய் மட்டுமில்லாமல், உடல் ரீதியாக பல்வேறு நோய்களின் தாக்கத்திற்கும் ஆளாகின்றார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments