சரியான தூக்கம் இல்லையா? அப்படியாயின் இப்படி ஒரு ஆபத்து காத்திருக்கின்றது

Report Print Givitharan Givitharan in நோய்
0Shares
0Shares
lankasrimarket.com

உடலின் சீரான இயக்கத்திற்கு போதியளவு தூக்கம் அவசியம் ஆகும்.

தூக்கமின்மையால் பல நோய்கள் உடலை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிடும். அவ்வாறான சில தாக்கங்கள் பற்றி அறிந்திருப்பீர்கள்.

ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக மற்றுமொரு ஆபத்து உள்ளதாக ஆய்வு ஒன்று எச்சரிக்கின்றது.

அதாவது தூக்கமின்மை காரணமாக அல்ஸீமர் நோய்க்கு காரணமாக மூளைப் புரதங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் விரைவாக அல்ஸீமார் நோய் தாக்கும் அபாயம் ஏற்படும் என வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் David M Holtzman தெரிவித்துள்ளார்.

அல்ஸீமார் நோயானது அமெரிக்காவில் மட்டும் 5 மில்லியன் வரையானவர்களை பாதித்துள்ளது. இதனால் அவர்கள் நினைவாற்றல் இழப்பினால் அவதிப்பட்டு வருகின்றனர்.

அல்ஸீமர் நோய்க்கான காரணங்கள் பற்றிய ஆய்வின்போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments