இதை செய்தால் குறட்டை பிரச்சனை வராது

Report Print Printha in நோய்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மை அறியாமல் ஏற்படும் ஒருவகை சுவாசக் கோளாறான குறட்டை பிரச்சனையை தடுப்பதற்கான சில வழிமுறைகளை இங்கு காண்போம்.

குறட்டை பிரச்சனையை தடுக்கும் வழிகள்?
  • உறங்கும் போது பக்கவாட்டில் படுத்துக் கொண்டால், குறட்டை ஏற்படுவதை தடுக்கலாம்.
  • இரவில் உறங்குவதற்கு முன் சிறிது நேரம் சுநீரில் ஆவிப்பிடித்தால் குறட்டை வருவதை தவிர்க்கலாம். ஏனெனில் அது மூக்கில் உள்ள அடைப்புக்களை நீக்கி, காற்று எளிதாக செல்ல வழிவகுக்கும்.
  • புகைப்பிடிக்கும் போது, அது தொண்டையில் புண் மற்றும் வீக்கங்களை உருவாக்குவதால், அது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தி குறட்டை பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே புகைப்பிடித்தல் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.
  • மது அருந்துவது, தூக்க மாத்திரைகளை உட்கொள்வது போன்ற பழக்கங்களை நிறுத்தினால், அது தசைகளை தளர்வடையச் செய்து, காற்றை எளிதாக செல்ல உதவும் எனவே இதனால் குறட்டை பிரச்சனைகள் ஏற்படாது.
  • சளி அல்லது ஜலதோஷம் பிடித்தால், அதற்கு சரியான சிகிச்சை பெற்று வந்தால், உறங்கும் போது குறட்டை ஏற்படுவதை தவிர்க்கலாம்.
  • இரவில் தூங்கும் முன் பிட்சா, பர்கர் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது சளி பிரச்சனையை ஏற்படுத்துவதுடன் குறட்டை பிரச்சனையையும் உண்டாக்கும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments