திடீரென குறையும் உடல் எடை: ஏற்படும் பக்கவிளைவுகள் தெரியுமா?

Report Print Printha in நோய்
0Shares
0Shares
lankasrimarket.com

உடலின் எடை திடீரென குறைந்து விட்டால், நம் உடலில் பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

உடல் எடை குறைவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்?

  • நம் உடல் எடை குறைந்தால், அதற்கு காரணம் சத்துள்ள உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளவில்லை என்று அர்த்தம். அதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்திகள் குறைந்து சத்து குறைபாடுகள் ஏற்படுகிறது.

  • சர்கோபீனியா எனும் நோய் நம் எலும்பு தசைகளை வலுவிழக்க செய்து, நம்முடைய உடல் எடையையும் குறைக்கிறது. இதற்கு சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும்.

  • பல வகையான புற்று நோய்களுக்கு முக்கிய காரணம், உடல் எடை குறைப்பு என்று ஆய்வுகள் கூறுகிறது. ஏனெனில் புற்றுநோயை அழிக்கும் எதிர்ப்பு செல்கள் இயற்கையாக நம் உடலில் உள்ளது. எனவே உடல் எடை குறையும் பட்சத்தில் அந்த செல்கள் அழிந்து புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.

  • அன்றாடம் நாம் சரியான நேரத்தில் உணவுப் பொருட்களை உட்கொள்ளாமல் தவிர்ப்பதால், உடல் எடை குறைவதுடன், அல்சர் எனும் வயிற்று புண்களும் ஏற்படுகிறது.

  • உடல் எடை குறையும் பட்சத்தில், மன அழுத்தம் அதிகமாகிறது. இதனால், மூளையில் உள்ள செரோடோனின் அளவுகள் முற்றிலும் பாதிப்படைந்து, மூளையின் ஆரோக்கியம் குறைகிறது.

  • இதயம், போதுமான ரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை நம் உடம்பில் செலுத்தாமல் இருந்தால், இதயநோய் ஏற்படுவது மட்டுமில்லாமல், உடல் எடையும் குறைந்து, இதயத்தின் தசைகள் வலுவிழக்கிறது.

  • திடீரென்று நம்முடைய உடல் எடை குறையும் போது, நம் உடலில் இருக்கும் சத்துகளும் குறைந்து விடும். இதனால் முதுமை பருவத்தை தோற்றுவிக்கும் செல்கள் இளமைப் பருவத்திலேயே உருவாகி, முதுமை நிலையை ஏற்படுத்துகிறது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments