நரம்பு முடிச்சு பெண்களை தாக்குவது ஏன்? தடுக்கும் வழிகள் உள்ளதா?

Report Print Printha in நோய்
0Shares
0Shares
lankasri.com

நரம்பு முடிச்சு, சுருள் சிரை நரம்பு என்று கூறப்படும் வேரிகோஸ் வெயின் எனும் நோய் பெண்களுக்கு கர்ப்பம், மாதவிடாய் நிற்றல், ஹார்மோன் மாறுபாடுகள், கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ளுதல் போன்ற காரணத்தினால் ஏற்படுகிறது.

கர்ப்பக் காலத்தில் உள்ள பெண்களுக்கு கால்களில் இருந்து இடுப்பிற்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் வேகம், அளவு குறைவதால், கால்களில் ரத்த குழாய்கள் வீங்கி அல்லது ஹார்மோன் மாறுபாடுகள் காரணமாக இந்த நரம்பு முடிச்சு பிரச்சனை ஏற்படுகிறது.

இத்தகைய பாதிப்பினால், புண் ஏற்பட்டு, ரத்த கட்டிகள் மற்றும் அதிக ரத்த கசிவு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

நரம்பு முடிச்சு பிரச்சனையை தடுக்க பின்பற்ற வேண்டியவை?
  • நீண்ட நேரம் நிற்பதனை தவிர்க்க வேண்டும்.
  • உடல் எடையை குறைப்பது மிகவும் அவசியம்.
  • ரத்தோட்டத்தை சீராக்கும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
  • படுத்தல் மற்றும் அமரும் போது கால்களை உயரமாக தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருவது, நிற்பது, வேலை செய்யாமல் இருக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
  • தினமும் சில குறிப்பிட்ட யோகா பயிற்சிகளை செய்ய வேண்டும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments