சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிகள்

Report Print Gokulan Gokulan in நோய்
0Shares
0Shares
lankasrimarket.com

நீரிழிவு நோய்

இது சர்க்கரைநோய், நீரிழிவு', `மதுமேகம், `பிரமியம், டயாபடிக், சுகர் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத நிலையில் அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும்விதத்தில் உடலால் பயன்படுத்த முடியாத நிலைதான் சர்க்கரைநோய் எனப்படுகிறது.

ஆனால், இது ஒரு நோயல்ல. குறைபாடு. இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் ஏற்படும் ஒரு நிலை. மனித உடலில் சேரும் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற, இன்சுலின் மிக அவசியம்.

குறிப்பாக, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் ஆபாயமும் உள்ளது.

இதற்கு கட்டுக்குள் வைத்திருப்பதற்கு,

பெரிய நெல்லிக்காய் ஒன்றுடன் அதைவிட அளவில் இரண்டு மடங்கு பெரிய பாகற்காயைச் சேர்த்து அரைத்து, சாறாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால், இது இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

மாவிலைக் கொழுந்துடன் துவரம் பருப்பு சேர்த்து, வேகவைத்துச் சாப்பிட்டு வந்தாலும், சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும்.

அதோடு இயற்கையாக நமக்கு கிடைக்கும் அறுகம்புல், கீரைகள், கீழாநெல்லி, கொய்யாப்பழம், வேப்பம்பூ போன்றவற்றை ஏதாவது ஒருவகையில் தனித்தனியாக உண்ணலாம். வேப்பம்பூவை ரசம் செய்தும், வெந்தயத்தை தோசையில் சேர்த்தும் சாப்பிடலாம்.

ஆவாரம்பூவை பாலில் வேகவைத்து மாலை நேரப் பானமாக அருந்துவதோடு அதனை கூட்டு, பொரியல் செய்தும் சாப்பிடலாம்.

அரிசிச்சோறு, கோதுமை உணவு என எதுவாக இருந்தாலும் அளவோடு உண்பது நல்லது.

சர்க்கரைநோயால் , மெலிந்து, காணப்படுபவர்கள் மறுபடியும் சீரான தேகத்தைப் பெற மூங்கிலரிசி உதவும். மூங்கிலரிசியை வெண்பொங்கல் போலவும் பாயசமாகவும் செய்து சாப்பிடலாம்.

அத்துடன் மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிசிரி ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து, அரைத்துத் தூளாக்கி, அதில் இரண்டு டீஸ்பூன் எடுத்து கஞ்சிபோலக் காய்ச்சி சாப்பிட்டுவந்தால் உடல் உறுதிபெறும். சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும்.

குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் சாப்பாட்டில் கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். உடல் எடையை அதிகரிக்கச்செய்யும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது, புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களைக் கைவிடுதல், உடலுழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்றவற்றின் மூலம் சர்க்கரைநோயின் பாதிப்புகளில் இருந்து விலகி ஆரோக்கிய வாழ்க்கை வாழலாம்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்