இலங்கையின் பொருளாதாரத்தில் வளர்ச்சி: உலக வர்த்தக ஸ்தாபனம் அறிவிப்பு

Report Print Shalini in பொருளாதாரம்
0Shares
0Shares
lankasri.com

இலங்கையின் பொருளாதாரத்தில் வளர்ச்சி காணப்படுவதாக உலக வர்த்தக ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டில் தெளிவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக, ஆய்வுகள் பல புலப்படுத்துவதாக வர்த்தக ஸ்தானத்தின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 164 நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி பற்றி உலக வர்த்தக ஸ்தாபனம் கவனம் செலுத்தியிருந்தது.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக உள்ளதென ஸ்தாபனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்